ஆப்பிள் அறிவிப்பு: “ஐபோன் ஓனர்கள் நள்ளிரவில் துயில் எழுவதை தடுக்க முடியவில்லை!”
ஆப்பிள் நிறுவனம், லட்சக்கணக்கான ஐபோன் வாடிக்கையாளர்கள் நள்ளிரவில் துயில் எழுப்பப்படுவதை தம்மால் சரி செய்ய முடியவில்லை என இன்று அறிவித்துள்ளது. கடந்த 1-ம் தேதியில் இருந்து இந்த கோளாறு ஐபோன்களில் உள்ளதாக புகார் செய்யப்பட்டுள்ளது.
ஐபோனில் ‘do not disturb’ செயல்பாடு உள்ளது. குறிப்பிட்ட நேரத்தில் போன்கள் சைலென்ஸ் மோடுக்கு ஆட்டோமேட்டிக்காகவே செல்லும் பங்ஷன் அது. இரவில் தூங்கும்போது தொந்தரவு செய்யப்படாமல் இருப்பதற்காக அநேகர் இந்த செயல்பாட்டை பயன்படுத்துகின்றனர்.
சரியான முறையில் இயங்கிக் கொண்டிருந்த ‘do not disturb’ செயல்பாடு, புத்தாண்டு தினத்தில் செயலிழந்தது. இது குறித்து ஏராளமான புகார்கள் ஆப்பிள் நிறுவனத்துக்கு செல்லவே, அதை சரிசெய்யும் முயற்சியில் இறங்கினார்கள் அவர்கள். ஆனால், முயற்சி வெற்றியளிக்கவில்லை என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
“புது வருடத்துக்கு தேதி மாறியபோது ஏற்பட்ட ஒரு கிளிச் இது. இதை எம்மால் சரிசெய்ய முடியவில்லை. ஆனால் நல்ல செய்தி, ஜனவரி 7-ம் தேதியின் முடிவில் 8-ம் தேதிக்கு மாறும்போது, இது ஆட்டோமெட்டிக்காக சரியாகிவிடும் அதன்பின் ‘do not disturb’ செயல்பாடு இயங்கும். 8-ம் தேதிவரை, மேன்யுவலாக ஸ்லீப் மோடுக்கு கொண்டு செல்வதே ஒரே வழி” என்று அறிவித்துள்ளது ஆப்பிள்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!