திருப்புவனம் அருகே 7அடி உயர முள்படுக்கையில் பெண் சாமியார் அருள்வாக்கு
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே லாடனேந்தலில் பூங்காவனம் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள வீட்டில் பெண் சாமியார் நாகராணி அம்மையார் குடியிருந்து வருகிறார். இங்கு ஆண்டுதோறும் பங்குனி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து நேர்த்தி கடன் செலுத்துவர். இக்கோயிலின் சிறப்பு அம்சமாக ஆண்டுதோறும் மார்கழி 17ம் தேதி நாகராணி அம்மையார் முள்படுக்கையில் 3 மணி நேரம் தவம் இருப்பார். அப்போது பக்தர்கள் கூடி நின்று தரிசனம் செய்வர். இதில் பக்தர்களுக்கு அருள்வாக்கும் கூறுவார். கடந்த 20 ஆண்டாக முள்படுக்கை அருள்வாக்கு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது.இதற்காக கார்த்திகை 1ம் தேதி முதல் 48 நாட்கள் நாகராணி அம்மையார் விரதம் இருந்து நேற்று காலை முள்படுக்கையில் ஏற தயாரானார். இவர் தவம் செய்வதற்காக கற்றாழை, காட்டு கருவேலமுள், நாட்டு கருவேல முள், காக்கா முள் ஆகியவை கொண்ட 7 அடி உயரம் கொண்ட முள்படுக்கை வைக்கப்பட்டிருந்தது. இதில் காலை 10 மணிக்கு நாகராணி அம்மையார் ஏறினார். இந்நிகழ்வை காண திருப்புவனம், மதுரை, மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்தனர். அவர்கள் நாகராணி அம்மையாரை தரிசனம் செய்துவிட்டு சென்றனர். அப்போது 50க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு நாகராணி அம்மையார் அருள்வாக்கு கூறினார். மதியம் 1 மணிக்கு முள்படுக்கையில் இருந்து இறங்கினார்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!