செல்களின் பெண் என வர்ணிக்கப்பட்ட விஞ்ஞானி காலமானார்
இரத்தத்தில் உள்ள செல்களை ஆராய்ச்சி செய்து புற்றுநோய்க்கான காரணிகளை கண்டறிய வழிவகுத்த இத்தாலிய நாட்டு பெண் விஞ்ஞானி ரீட்டா லெவி மோண்டால்ச்சினி நேற்று காலமானார்.
இத்தாலி நாட்டின் உள்ள வடக்கு தூரின் பகுதியில் 1909ம் ஆண்டு வசதியான யூத குடும்பத்தில் பிறந்தவர் ரீட்டா மெலவி மோண்டால்சினி.
கல்லூரிப்படிப்பை முடித்து மருத்துவ பட்டம் பெற்ற போதும் மருத்துவ ஆராய்ச்சியை தொடரவிடாமல், இத்தாலிய பாசிஸ்ட் அரசு அவருக்கு தடை விதித்தது.
இந்த தடையையும் மீறி ரத்தத்தில் உள்ள செல்களை பற்றி அவர் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
அமெரிக்காவின் உயிரியல் ஆராய்ச்சியாளர் ஸ்டான்லி கோஹன் என்பவருடன் இணைந்து நடத்திய புற்றுநோய் ஆராய்ச்சிக்காக, 1986ம் ஆண்டு உலகின் உயரிய விருதான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
இவரது ஆராய்ச்சிக்கள் மருத்துவ உலகுக்கு கொடையாக மாறிய பின்னர், இத்தாலியின் உயர்ந்த ஆராய்ச்சியாளராக கௌரவப்படுத்தப்பட்டார்.
இவர் 100 வயதை கடந்த நிலையிலும் தொடர்ந்து மருத்துவ ஆராய்ச்சியிலேயே தனது கவனத்தை செலுத்தி வந்தார்.
இந்நிலையில் நேற்று உறங்கிய நிலையிலேயே காலமானார்.
'செல்களின் பெண்' என இத்தாலியர்களால் அழைக்கப்படும் லெவியின் மரணம், மனித குலத்திற்கு மாபெரும் இழப்பாகும் என ரோம் நகரின் மேஜர் கியானி அலெமனோ தெரிவித்துள்ளார்.
'20 வயதிலிருந்ததை விட 100 வயதில் எனது சிந்தனை மிக உச்சமாக இருக்கிறது.
இதற்கு காரணமான அனுபவத்திற்கு நன்றி சொல்கிறேன்' என ஒரு பேட்டியில் லெவி தெரிவித்திருந்தார்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!