Wednesday, January 2, 2013

குறைகிறது தங்கம் இறக்குமதி : நிதிப் பற்றாக்குறையை போக்க மத்திய அரசு நடவடிக்கை

குறைகிறது தங்கம் இறக்குமதி : நிதிப் பற்றாக்குறையை போக்க மத்திய அரசு நடவடிக்கை


மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க தங்க இறக்குமதியை கணிசமாக குறைப்பது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் இதனையை தெரிவித்துள்ளார். ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு இடையே இடைவெளி இருப்பதால் நிதி பற்றாக்குறை அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். தற்போது 2225 கோடி டாலருக்கு தங்கம் இறக்குமதி செய்யப்படுவதாக கூறிய ப.சிதம்பரம், இதனையை பாதி அளவாக குறைத்தால் அன்னிய செலாவணி இருப்பு உயர வாய்ப்பு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் தங்கத்தின் பயன்பாட்டையை ஓரளவுக்கு குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தங்கத்தின் மீதான இறக்குமதிக்கு கூடுதலாக வரி விதிக்க நேரிடும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!