Wednesday, January 2, 2013

இலங்கையில் உருவான காற்றழுத்த நிலையால் தமிழகத்தில் நாளை மழை!

இலங்கையில் உருவான காற்றழுத்த நிலையால் தமிழகத்தில் நாளை மழை!


நாளை முதல் தென் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வானிலை மையம் ஏற்கனவே வட கிழக்குப் பருவ மழை முடிந்து விட்டதாக அறிவித்த்திருந்தது. இந்த நிலையில் தற்போது வங்கக் கடலில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தென் தமிழகத்தில் மழை பெய்யும், குறிப்பாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழைக்கு குளிர்கால மழை என்றும் வானிலை மையம் பெயரிட்டுள்ளது.

வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணன், “இலங்கையில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாளை (வியாழக்கிழமை) முதல் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்யும். தொடர்ந்து அந்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்மாவட்டங்கள் தவிர மற்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யலாம். அதுவரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் மழை பெய்யலாம்” என்றார்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!