சுவிஸ் கொக்கு மாக்ஸ் காலமானது
இரண்டு மாதக் குஞ்சாக இருந்த காலம் முதல் செயற்கைக்கோள் மூலமாகக் கூர்நோக்கு ஆய்வு முறையில் கவனிக்கப்பட்டு வந்த Max என்று பெயரிடப்பட்ட சுவிஸ் கொக்கு ஸ்பெயினுக்கு சென்றிருந்த போது இறந்துவிட்டது.
1950ம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் கொக்கு இனம் அழிந்துவிட்ட போது மாக்ஸ் என்பவர் தன் சொந்த முயற்சியால் கொக்கு இனத்தைத் திரும்பவும் பெருகச் செய்தார்.
இதனால் செயற்கைக் கோள் ஆய்வுக்கு தெரிவு செய்யப்பட்ட இந்த கொக்குக்கு Max என்று பெயர் சூட்டப்பட்டது.
இந்த மாக்ஸ் கொக்கு மேற்கு சுவிட்சர்லாந்தில் அவெஞ்சஸ் என்ற பகுதியில் பிறந்தது.
இது ஆண்டுதோறும் ஸ்பெயின், அல்ஜீரியா நாடுகளுக்கு வலசை போவதுண்டு.
ஜேர்மனியில் கூடுகட்டி குஞ்சு பொரிக்கும் இதுவரை 31 குஞ்சுகள் பொரிந்துள்ளது.
தன் வாழ்நாளில் மொத்தம் அறுபதினாயிரம் கி.மீ. வரை பறந்திருக்கிறது.
மாக்சுக்கு பத்தாண்டுகள் நிறைவு பெற்ற போது அதன் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் புத்தகம் ஒன்று வெளியிடப்பட்டது.
ஃபிரிபோர்கில் உள்ள இயற்கை உயிரினங்களுக்கான அருங்காட்சியகத்தின் ஆவணங்களின் படி இந்த மாக்ஸ் கொக்கு தான் மிக நீண்ட காலமாக செயற்கை கோள் மூலமாக கண்காணிக்கப்பட்டு வந்துள்ளது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!