தமிழகம் முழுவதும் பட்டியல் ரெடி நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடல்
தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன. இதற்கான பட்டியல் தமிழகம் முழுவதும் தயாரிக்கப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் 28 கடைகள் இந்த பட்டியலில் வருகின்றன. தமிழகம் முழுவதும் 6,823 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் தினமும் சராசரியாக 80 கோடி முதல் ஸி100 கோடி வரை மதுபான விற்பனை நடக்கிறது.
தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் அதிக விபத்துக்கள் நடக்கின்றன. இவற்றுக்கு குடிபோதையில் வாகனம் ஓட்டுவதும் ஒரு காரணமாக அமைந்து விடுகிறது. நெடுஞ்சாலைகளில் கடைகள் இருப்பதால் குடிப்பவர்களுக்கு வசதியாக மாறி விடுகிறது. இதை தவிர்க்கும் பொருட்டே நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடும் முடிவை அரசு எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த வாரம் குமரி மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள், ஊழியர்களுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது அரசு தெரிவித்த உத்தரவுபடி குமரி மாவட்டத்தில் 28 கடைகள் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலை பகுதிகளில் வருகிறது. இந்த கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த இடம் இல்லாவிட்டாலும், படிப்படியாக வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும். இதற்கான மாற்று இடங்கள் குறித்து தகவல் இருந்தால் தெரிவிக்கவும் எனவும் அதிகாரிகள் ஊழியர்களிடம் கூறினர்.
முதல்வர் உத்தரவு
டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறுகையில், முதல்வர் ஜெயலலிதா சென்னை நீலாங்கரை சாலையில் சென்றபோது அந்த வழியில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இருந்த டாஸ்மாக் கடைகளில் வாகன ஓட்டிகள் பலர் நின்று கொண்டிருந்தனர். இவர்கள் வாகனம் ஓட்டினால் விபத்தில்லாமல் எப்படி இருக்க முடியும் என யோசித்த முதல்வர் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு இந்த நடவடிக்கையை மேற்கொள்ள உத்தரவிட்டதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். தற்போது தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகளை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. இந்த பகுதியில் பார் நடத்தி வருபவர்களுக்கும் நோட்டீஸ்கள் கொடுத்து உள்ளனர் என்றார்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!