Wednesday, December 5, 2012

தொழிற்சாலை கழிவுகளால் மாசுபட்டு வரும் புண்ணிய நதி

தொழிற்சாலை கழிவுகளால் மாசுபட்டு வரும் புண்ணிய நதி




தொழிற்சாலை கழிவுகளால் மாசுபட்டு வரும் யமுனை நதியை உயிர்பிக்க அரசு 200 மில்லியன் ரூபாய்கள் செலவழித்துள்ளது.
யமுனை ஆறு, வட இந்தியாவின் முக்கியமான ஆறுகளுள் ஒன்றாகும்.

உத்தராஞ்சல் மாநிலத்தில் இமய மலையில் அமைந்துள்ள யமுனோத்ரி என்ற பெயரில் தொடங்கும் இந்த ஆறு, டெல்லி, ஹரியானா ஆகிய மாநிலங்கள் வழியாக ஓடி உத்தரப் பிரதேசத்தின் அலகாபாத் நகரில் கங்கை ஆற்றுடன் கலக்கிறது.

யமுனோத்ரியிலிருந்து அலகாபாத் வரை 1370 கிமீ தூரம் வரை ஓடுகிறது.

டெல்லி, மதுரா, ஆக்ரா ஆகிய நகரங்கள் யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளன.

உலகப் பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்றான தாஜ் மஹால் யமுனையின் கரையில் அமைந்துள்ளது.

இதற்கிடையில் அப்பகுதியிலுள்ள பெரும்பாலான தொழிற்சாலை கழிவுகள் யமுனை ஆற்றில் பனிக்கட்டிகள் போன்ற நுரைகளாக காட்சியளிக்கிறது.

இந்நதியில் மக்கள் புண்ணிய ஆறு எனும் நம்பிக்கையால் நீராடி வருகின்றனர். அதிலும் சமீபத்தில் கடந்து சென்ற முழுப் பூரணை தினத்தில் கொண்டாடப்படும் கார்த்திகைப் பௌர்ணமி காரணமாக பல பக்தர்கள் அங்கு நீராடியும் நீச்சலடித்தும் உள்ளனர்.

மேலும் இப்பகுதிகளில் மீன்களோ அல்லது பிற கடல் வாழ் உயிரினங்களோ வாழத் தேவையான ஓக்ஸிஜன் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

600 மில்லியன் கலொன்ஸ் மாசுக்கள் நியூடெல்லியில் இருந்து மாத்திரம் ஒவ்வொரு வருடமும் யமுனையில் கலந்து வருகின்றது. இது இவர்கள் சுத்தப் படுத்த எத்தனித்துள்ள அளவை விட மிகக் கூடியது ஆகும்.

முன்னதாக இந்துக்களின் மிக முக்கிய புனித நதியான கங்கையில் புற்று நோயை உண்டாக்க கூடிய இரசாயனங்கள் கலந்திருப்பதாக, கடந்த ஒக்டோபர் மாதம் வெளியான ஒரு ஆய்வு தெரிவித்திருந்தது.









No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!