Tuesday, December 4, 2012

மாணவிகளின் ஆடையை களைந்து சோதனை

பள்ளியில் விடுதி மாணவிகளின் ஆடையை களைந்து சோதனை பெற்றோர் முற்றுகை போராட்டம்



நெல்லை பள்ளியில் விடுதி மாணவிகள் ஆடைகளை கலைந்து சோதனை செய்த வார்டன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். பாளை ஐகிரவுண்ட் பகுதியில் அறநிலையத்துறைக்கு சொந்தமான பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 700க்கும் மேற்பட்டவர்கள் படித்து வருகிறார்கள். இதில் 80 மாணவிகள் விடுதியில் தங்கி படிக்கின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன் விடுதி பாத்ரூமில் மாதவிடாய் துணிகள் கிடந்துள்ளன. அது கழிவறையில் அடைத்துக் கொண்டதாக தெரிகிறது. இதைப்பார்த்த பெண் வார்டன், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ்1, பிளஸ்2 மாணவிகள் 20 பேரை அழைத்து, பாத்ரூமில் இவற்றை போட்டது யார்? என விசாரித்துள்ளார். வார்டன் மாணவிகளை அவதூறாக பேசி திட்டியதுடன் அவர்களின் ஆடைகளை களைந் து சோதனை நடத்தியதாக தெரிகிறது.

இதனால் அவமானம் அடைந்த மாணவிகள் விடுதியிலிருந்து வெளியேறி தங்கள் ஊர்களுக்கு சென்றனர். பெற்றோர்களிடம் நடந்த விவரத்தை கூறி அழுதனர். இதனால் பெற்றோர் நேற்று பள்ளியை முற்றுகையிட்டனர். சம்பந்தப்பட்ட வார்டன் 2 ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க கோஷமிட்டனர்.

தகவலறிந்து அறநிலையத் துறை உதவி ஆணையர் கண்ணதாசன், ஐகிரவுண்ட் எஸ்ஐக்கள் வேல்கனி, ரஞ்சித்சிங் ஆகியோர் பள்ளிக்கு வந்து விசாரணை நடத்தினர். மாணவியின் பெற்றோர் தரப்பில் கூறுகையில், ''விடுதி வார்டன் ஆடைகளை கலைந்து சோதனை நடத்தியதால் ஒரு சில மாணவிகள் அவமானம் தாங்காமல் தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.

தலைமை ஆசிரியையிடம் கேட்டால், இதை பெரிதுபடுத்தினால் மாணவிகளுக்கு டிசியை கொடுத்து அனுப்பி விடுவோம் என்று மிரட்டுகிறார். வார்டன் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம்'' என்றனர். இதற்கு பதிலளித்த கண்ணதாசன், சம்பந்தப்பட்ட பெண் வார்டன் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இனி இதுபோன்று நடைபெறாது'' என்று கூறினார்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!