கனடாவில் அதிகளவு பனிப்பொழிவு: கவனமுடன் இருக்கும்படி மக்களுக்கு எச்சரிக்கை
கனடாவில் இந்த ஆண்டில் பனிப்பொழிவு அதிகளவு இருக்கும் என்றும், எனவே மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கனடாவின் மூத்த தட்பவெப்பவியல் நிபுணர் டேவிட் பிலிப்ஸ் கூறுகையில், இந்த மாதம் முதல் பிப்ரவரி வரை கனடாவில் பனிப்பொழிவு கடந்தாண்டை விட அதிகமாக இருக்கும் என்று தெரிவித்தார்.
மேலும் நாட்டின் கிழக்கு பகுதியில் சற்று அதிகமான பனியும், குளிரும் இருக்கும்.
மேற்கு பகுதியில் வழமையான நிலையும், வடக்கு அல்பெர்ட்டா, யுகோன், வடமேற்கு பகுதிகளில் சராசரி அளவை விட குறைவான வெப்பநிலையே காணப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!