542 தொன் எடையில் உலகிலேயே மிகப்பெரிய கிறிஸ்துமஸ் மரம்
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் உலகிலேயே மிகப்பெரிய மிதக்கும் கிறிஸ்துமஸ் மரம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பிரேசிலில் உள்ள மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனம் ஒன்று, இந்த மரத்தை அமைத்துள்ளது.
இது 85 மீற்றர் உயரமும், 542 தொன் எடையும் கொண்டது.
கண்ணைக் கவரும் இந்த மரம் பொதுமக்களின் பார்வைக்காக நேற்று திறக்கப்பட்டது.
பல வகையான இரும்புப் பொருட்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வண்ண வண்ண விளக்குகளால் மரம் அலங்கரிப்பட்டுள்ளது.
இதன் திறப்புவிழாவின் போது, பல்வேறு திசைகளில் இருந்து வெடித்துக் கிளம்பிய வாண வேடிக்கைகளும், வண்ண வண்ண ஒளிவிளக்குகளும் இரவை பகலாக மாற்றின.
இதனை ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கண்டு களித்து மகிழ்ச்சியுற்றனர்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!