டில்லியின் புதிய சட்டத்தால், ஜெட் ஏர்வேஸூக்கு அடித்தது முதலாவது லக்! 1,600 கோடி ரூபா!!
ஜெட் ஏர்வேஸ் (Jet Airways) விமான நிறுவனத்தின் 24 சதவீத பங்குகளை அபுதாபியின் எதியாட் (Etihad) விமான நிறுவனம் வாங்கவுள்ளது என்று தெரியவருகிறது. தற்போது பேச்சுவார்த்தையில் உள்ள இந்த டீல், இம்மாத இறுதிக்குள் பைனலைஸ் பண்ணப்பட்டு விடும் என விமான வர்த்தக வட்டாரங்களில் கூறப்படுகிறது.
கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ஜெட் ஏர்வேஸின் 24 சதவீத பங்குகளுக்கு, எதியாட் ஏர்லைன்ஸ் கொடுக்கவுள்ள விலை, 1,600 கோடி ரூபா.
தற்போது இரு விமான நிறுவனங்களும் இந்த டீலின் மற்றைய விபரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றன. பேச்சுவார்த்தை மேஜையில், இரு ஏர்லைன்ஸ் நிறுவனங்களும் ஒரே விமானத்தில் இரு நிறுவனங்களின் விமான இலக்கங்களை கொண்டு ஆபரேட் பண்ணும் (code share) ஒப்பந்தங்கள் உள்ளன என்று தெரிகின்றது.
இவர்கள் தற்போது பேசி முடிக்கும் டீல், சரியாக போய் முடிந்தாலும், ஜெட் ஏர்வேஸ் மத்திய உள்துறை அமைச்சு, மற்றும் எஃப்.ஐ.பி.பி. (FIPB – Foreign Investment Promotion Board) அனுமதியை பெற்றால்தான் டீல் இறுதி செய்யப்பட முடியும். ஆனால், அதில் சிக்கல் ஏதும் இருப்பதாக தெரியவில்லை.
மத்திய அரசு சமீபத்தில்தான் இந்திய விமான நிறுவனங்களில் 49 சதவீத உரிமையாளராக வெளிநாட்டு நிறுவனங்கள் இருக்கலாம் என அனுமதி வழங்கியிருந்தது. இந்த டீல் இறுதி செய்யப்பட்டால், அந்த புதிய சட்டத்தின்படி வெளிநாட்டு முதலீட்டை பெற்றுக் கொள்ளப்போதும் முதல் விமான நிறுவனமாக ஜெட் ஏர்வேஸ் இருக்கப்போகிறது.
இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டபோது, அதை எதிர்த்த விமான நிறுவனங்களில் ஒன்று, ஜெட் ஏர்வேஸ் என்பதுதான் இதிலுள்ள ஒரேயொரு தமாஷ்!
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!