Monday, December 3, 2012

சீனா வேகப் பாதையின் நடுவே இருந்த ஒற்றை வீடு இறுதியில் உயிரை விட்டது!

சீனா வேகப் பாதையின் நடுவே இருந்த ஒற்றை வீடு இறுதியில் உயிரை விட்டது!




சீனாவின் வேகப்பாதையின் நடுவே தனி பில்டிங்காக நின்றிருந்துத 5 மாடி வீடு பற்றி, ஏற்கனவே அறிவியலில் செய்தி வெளியிட்டிருந்தோம். (அதை தவற விட்டிருந்தால் இங்கே கிளிக் செய்யவும்)

இப்போது, அந்த வீடு இடிக்கப்பட்டு விட்டது.

வேகப்பாதையில் இந்த வீடு இருக்கும் இடம்வரை வேகமாக வரும் வாகனங்கள் ஸ்லோவாகி, வீட்டை சுற்றிச் செல்ல வேண்டும் என்ற நிலை இதுவரை இருந்தது. வீதி அமைப்பதற்காக அப்பகுதியில் நிலம் எடுக்கப்பட்ட போது, இந்த வீட்டு உரிமையாளர் தமது நிலத்தை கொடுக்க மறுத்த காரணத்தால், இந்த நிலை ஏற்பட்டிருந்தது.

மறுப்புக்கு காரணம் இந்த வீட்டு உரிமையாளர், அரசு வழங்கும் இழப்பீடு போதாது, அதை வைத்து இதே போல மற்றொரு வீடு கட்டிக்கொள்ள முடியாது என்று கூறியதுதான். இந்த விவகாரம் சர்வதேச அளவில் பிரபலமாகி விடவே, இப்போது அரசு இறங்கி வந்துள்ளது. வீட்டு உரிமையாளருடன் பேச்சுவார்த்தை நடத்தி, அதிக இழப்பீடு (260,000 யுவான்) தர சம்மதித்துள்ளது.

இதையடுத்து வீட்டு உரிமையாளர், தமது நிலத்தை அரசுக்கு கொடுத்து விட்டார்.

நிலம் கிடைத்தவுடன், சுடச்சுட வீட்டையும் இடிக்கத் தொடங்கி விட்டார்கள். வீடு இடிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட இரு போட்டோக்களை தருகிறோம்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!