Monday, November 5, 2012

ஹலோ, நோ, குட் சொல்லும் யானை : தென் கொரியாவில் ஆச்சரியம்

ஹலோ, நோ, குட் சொல்லும் யானை : தென் கொரியாவில் ஆச்சரியம்




 தென் கொரியாவில் வன விலங்கு பூங்காவில் உள்ள ஆசிய யானை ஒன்று, கொரிய மொழி பேசுகிறது. அதை பார்த்து சுற்றுலா பயணிகள் ஆச்சரியப்படுகின்றனர். மனிதர்களை போலவே கிளி பேசும் என்பது தெரியும். ஆனால் கொரிய மொழியில் பேசி, யானை ஒன்று அசத்தி வருகிறது. கசகஸ்தான் நாட்டில் யானை ஒன்று மனிதர்களை போலவே பேசியது குறித்து தகவல்கள் வெளியாயின. அந்த யானை ரஷ்ய மற்றும் கசக் மொழியில் சில வார்த்தைகளை பேசியதாக கூறப்பட்டது.

ஆனால், யானை பேசுவது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு எதுவும் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில், தென் கொரியாவின் எவர்லேண்ட் வன விலங்கு உள்ள பூங்காவில் உள்ள கோஷிக் என்ற ஆசிய யானை மனிதர்களை போலவே மிமிக்ரி செய்து வருகிறது. இந்த யானை கொரிய மொழியில் ஹலோ, நோ, சிட் டவுன், குட் போன்ற வார்த்தைகளை உச்சரிக்கிறது. தனது துதிக்கையை வாய்க்கு திணித்து ஒலி எழுப்புவதாக கூறுகின்றனர்.

இதுகுறித்து விஞ்ஞானிகள் ஏஞ்சலா மற்றும் டெக்கம்சே பிட்ச் ஆகியோர் கூறுகையில், யானை குட்டியாக இருந்த போதே இதுபோல் மிமிக்ரி செய்ய பழகி இருக்கும். அத்துடன் யானையை பராமரித்து வந்த பாகனும் அதற்கு மொழி கற்று கொடுத்திருக்க வாய்ப்புண்டு என்கின்றனர். யானை எப்படி மனிதர்களை போலவே பேசுகிறது என்பது குறித்து தற்போது விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். கொரிய மொழியில் சில வார்த்தைகளை கோஷிக் யானை பேசினாலும், அதன் அர்த்தம் அதற்கு தெரியவில்லை.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!