அமெரிக்காவை நோக்கி மீண்டும் ஒரு புயல்
சமீபத்தில் சான்டி புயல் அமெரிக்காவையே புரட்டி போட்ட நிலையில், தற்போது புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளது.
கடந்த வாரம் வீசிய சான்டி புயல், அமெரிக்காவை நிலைகுலைய செய்து விட்டது.
இந்நிலையில் வருகிற வாரத்தின் பிற்பகுதியில் அமெரிக்காவின் வடகிழக்கு கடற்கரை பகுதியில் மற்றொரு புயல் வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும் அட்லாண்டிக் மத்திய கடல் மற்றும் புதிய இங்கிலாந்து கடல் பகுதியில் மணிக்கு 50 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசும்.
மரங்கள்- மின் கம்பங்கள் சாயலாம், பல அடி உயரத்திற்கு ராட்சத கடல் அலைகள் எழும்பும், கடும் பனிப்பொழிவும் இருக்கும்.
மொத்தத்தில் சான்டிக்கு நிகரான பாதிப்பை விளைவிக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!