Monday, November 5, 2012

33 தடவை விண்வெளிக்கு சென்று வந்த அட்லாண்டிஸ் விண்கலம் ஓய்வு

33 தடவை விண்வெளிக்கு சென்று வந்த அட்லாண்டிஸ் விண்கலம் ஓய்வு




அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் 30 ஆண்டுகளுக்கு முன்பு அட்லாண்டிஸ் என்ற விண்கலத்தை வடிவமைத்தது.
அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் உட்பட 15 நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு கூடத்தை கட்டி வருகிறது.

இந்த கூடத்திற்கு அட்லாண்டிஸ் விண்கலம் 12 தடவை சென்று வந்துள்ளதுடன், பூமியை 4,848 தடவை சுற்றி வந்துள்ளது.

மேலும் 20 கோடியே 26 லட்சத்து 73 ஆயிரத்து 974 கிலோ மீற்றர் தூரம் விண்வெளியில் பயணம் மேற்கொண்டுள்ளது.

விண்வெளியில் 305 நாட்கள் தங்கியிருந்து சாதனை படைத்துள்ள அட்லாண்டிஸ், 195 விண்வெளி வீரர்களை சுமந்து சென்றுள்ளது.

இவ்வாறு பல்வேறு சாதனைகளை படைத்த அட்லாண்டிஸ், கடந்தாண்டு ஜூலை மாதம் 21ஆம் திகதி பணி ஓய்வு பெற்றது. இந்நிலையில் நேற்று தனது இறுதி பயணத்தை முடித்து கொண்டுள்ளது.

தற்போது இந்த விண்கலம் புளோரிடாவில் கேப்கெனவரலில் உள்ள கென்னடி விண்வெளி ஆய்வு மையத்தின் அருங்காட்சியகத்தில் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அட்லாண்டிஸ் விண்கலம் வந்தவுடன் அதன் பணியை போற்றும் வகையில் பட்டாசு முழங்க வாணவேடிக்கையுடன் அதற்கு வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.















No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!