Monday, November 5, 2012

பெல்ஜியத்தில் தொட்டில் குழந்தை திட்டம் அறிமுகம்

பெல்ஜியத்தில் தொட்டில் குழந்தை திட்டம் அறிமுகம்






பெல்ஜியம் நாட்டில் தொட்டில் குழந்தை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பெல்ஜியத்தில் “அம்மாக்களுக்காக அம்மாக்கள்” என்ற தொண்டு நிறுவனம் சார்பில் ஆதரவற்ற குழந்தைகளைகளுக்காக பேபி பாக்ஸ்(Baby Box) என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

அதாவது குழந்தைகளை வெதுவெதுப்பான வெப்ப நிலையில், பாதுகாப்பாக வைத்திருக்கும் இன்குபேட்டர் கருவிதான் பேபி பாக்ஸ் என்ற பெயரில் வைக்கப்பட்டுள்ளது.

அதில் யாராவது குழந்தைகளை போட்டால் ஒலி எழுப்பும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆண்ட்வெர்ப் நகரில் நேற்று முன்தினம் ஆண் குழந்தையொன்று போடப்பட்டது.

தற்போது அக்குழந்தை நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் 6 மாதங்கள் வரை அந்த குழந்தையின் பெற்றோர் கண்டறியப்படவில்லை என்றால், குழந்தையை தத்து கொடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!