ஒடுதளமின்றி ரொக்கெட் போல பறக்கும் அதி நவீன ஆளில்லா விமானம்: ஈரான் அசத்தல்
அமெரிக்காவிற்கு போட்டியாக அதி நவீன ஆளில்லா விமானங்களை ஈரான் தயாரித்துள்ளது.
அமெரிக்கா தயாரிப்பில் உருவாகியுள்ள இவ்வகை விமானங்களுக்கு ஓடுதளம் தேவை.
ஆனால் ஈரான் தற்போது தயாரித்துள்ள இந்த விமானங்களுக்கு ஓடுதளம் தேவையில்லையாம்.
ரொக்கேட் போல விண்ணில் அதிவேகத்தில் பறந்து எதிரிகளை துள்ளியமாக தாக்கக்கூடியதாம்.
ஈரானின் அப்பாஸ் ஜாம் என்ற விஞ்ஞானி இதை வடிவமைத்து இருக்கிறார். இது போன்ற விமானம் உலகில் தயாரிக்கப்படுவது இதுவே முதன் முறையாகும்.
ஈரானில் வருகிற ஞாயிற்றுக்கிழமை கடற்படை தளம் திறக்கப்பட உள்ளது. அப்போது இது குறித்த தகவலை அந்நாடு வெளியிடுமென தெரிகிறது.
கடந்த ஒக்ரோபர் மாதம் இஸ்ரேலில் ஜீவில் மாகாணத்தில் அத்து மீறி நுழைந்த ஒரு ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அது தங்களுடையது என லெபனான் ராணுவம் உரிமை கொண்டாடியது.
ஆனால் சுட்டு வீழ்த்தப்பட்ட அந்த விமானத்தின் உதிரிபாகங்கள் ஈரானில் தயாரிக்கப்பட்டு லெபனானில் பொருத்தப்பட்டிருப்பதை இஸ்ரேல் ராணுவ மந்திரி அகமது வகிடி தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!