இங்கிலாந்தில் அதிகமான பனிப்பொழிவு: வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது
இங்கிலாந்தின் மேற்கு மற்றும் தென் பகுதியில் பனி அதிகமாக படர்ந்துள்ளதால், வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் சோமர்செட், வில்ட்ஷயர் மற்றும் டோர்செட் பகுதிகளில் நேற்று காலை முதல் பனி பொழிய தொடங்கியது.
மேலும் பனி உருகத் தொடங்கியுள்ளதால், இப்பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இத்துடன் பேத், புரோம், மிட்சோமர், நார்ட்டன் மற்றும் ரேட்ஸ்டோக் பகுதிகளில் அரையடி உயரத்திற்கும் மேலாக பனி படர்ந்துள்ளது.
இது குறித்து வெள்ள இடர் மேலாளர் கிரேக் உல்ஹவுஸ் கூறுகையில், இந்த ஆண்டில் கோடை காலத்தில் பெருமழை பொழிந்ததால் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது.
இந்நிலையில் பனிக்காலத்திலும் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் போது பனி உருகி வெள்ளப் பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளது என தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!