மலவாயிலில் மறைத்து வைத்து 2 கோடி பெறுமதியான தங்கக்கட்டிகளை கடத்த முயன்ற இருவர் கைது
இரண்டு கோடி ரூபா பெறுமதியான தங்கக்கட்டிகளை மலவாயிலில் மறைத்து வைத்து மும்பைக்கு கடத்த முயன்ற இரு இலங்கையர்களை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக சுங்க அதிகாரியொருவர் தெரிவித்தார்.
கட்டுநாயக்க விமான நிலைய போதைப் பொருள் தடுப்புப்பிரிவு பொலிஸாருக்கும் சுங்க பிரிவினருக்கும் கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையிலேயே குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 30 தங்க கட்டிகளும் மீட்கப்பட்டுள்ளதாகவும் அவ்வதிகாரி தெரிவித்தார்.
நேற்று முன்தினம் அதிகாலை 1.45 மணியளவில் மும்பை நோக்கி செல்லவிருந்த விமானத்தில் பயணிப்பதற்காக வந்த கொழும்பை சேர்ந்த சுமார் 45 வயது மதிக்கத்தக்க இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
கைது செய்யப்பட்டவர்கள் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பேதி மருந்து கொடுக்கப்பட்டதன் பின்னரே தங்கக்கட்டிகள் வெளியேற்றப்பட்டுள்ளன.
ஆணுறைக்குள் போட்டு மலவாயிலில் மறைத்தே இவ்விருவரும் தங்க கட்டிகளை கடத்த முயன்றுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஒருவரிடம் 1600 கிராம் நிறையுடைய 16 தங்க கட்டிகளையும் மற்றவரிடம் 1455 கிராம் நிறையுடைய 14 தங்கக் கட்டிகளையும் சுங்க அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
இதன் பெறுமதி 19.6 மில்லியன் ரூபாய் ௭ன தெரிவிக்கப்படுவதுடன் சுங்க அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!