ஒரு போர் விமானத்தின் இறுதிப் பயணம்: பிரிட்டிஷ் பெருமை பேசுவோர் கண் கலங்குகின்றனர்!
பிரிட்டிஷ் விமானப் படையின் உலக யுத்த குண்டுவீச்சு விமானங்களில், தற்போதும் பறக்கும் நிலையில் உள்ள இறுதி விமானம், இறுதியாக தரையிறங்கப் போகிறது. அதாவது, ஓய்வு பெறப்போகிறது. இந்த விமானம், அணுகுண்டு வீசக்கூடிய விமானம் என்பது மற்றொரு விஷயம்.
ஆவ்ரோ வொல்கன் XH558 ரக விமானம் இது. இடையே சில காலம் பறக்காமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆவ்ரோ வொல்கன், அதன் வரலாற்று முக்கியத்துவம் கருதி, மீண்டும் பறக்கவிடப்பட வேண்டும் என்று ஏகப்பட்ட பிரஷர் கொடுக்கப்பட்டது. அதற்காக பல மில்லியன் பவுண்ட்ஸ் நிதி சேகரிப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, 2007-ம் ஆண்டு, மீண்டும் பறக்க விடப்பட்டது.
2007-ம் ஆண்டில் இருந்து பிரிட்டிஷ் ராயல் விமானப்படையில் வரலாற்றுப் பெருமையை எடுத்துக் காட்டுவதற்காக 60 ஏர்-ஷோக்களில் பறக்கவிடப்பட்டது.
ஆனால், இந்த விமானத்தை பராமரிப்பது, ரொம்ப செலவானதாக உள்ளது. காரணம், இந்த மாடலே தயாரிப்பு நிறுத்தப்பட்டு பல வருடங்கள் ஆகின்றன. ஒரு சிறிய ஸ்பேர் பார்ட் தேவையென்றாலும், புதிதாக தயாரிக்கப்பட வேண்டும். கட்டி மேய்க்கும் செலவு கூரையைப் பிய்த்துக்கொண்டு போகவே, விமானத்துக்கு ஓய்வு கொடுப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
உலக யுத்தத்தின்போது பிரிட்டிஷ் படைகளில் யுத்தம் புரிந்தவர்களில் உயிருடன் இருப்பவர்கள், சரித்திரத்தில் ஆர்வம் உள்ளவர்கள், பிரிட்டிஷ் பெருமை பேசுபவர்கள் என்று பலதரப்பட்ட ஆட்களும், இந்த விமானத்தை தொடர்ந்து பறக்க வைக்க வேண்டும் என்று போராடிப் பார்த்தார்கள். ஆனால், பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சு தமது பட்ஜெட்டில், இந்த விமானத்தின் பராமரிப்புக்கு இனியும் பணம் ஒதுக்க முடியாது என்று கூறிவிட்டது.
அதனால், பிரிட்டிஷ் ராயல் விமானப்படையின் இறுதி ஆவ்ரோ வொல்கன் XH558 ரக விமானம், தனது இறுதிப் பறத்தலை நடத்தவுள்ளது. ஓய்வு பெறப்போகும் இந்த விமானத்தின் சில ஞாபகத்துக்குரிய கணங்களை, கீழேயுள்ள போட்டோக்களில் பாருங்கள்.
இதுதான், The Avro Vulcan bomber. நிறுத்தி வைக்கப்பட்டபின், பலரது பிரஷர் காரணமாக 2007ல் மீண்டும் பறக்க விடப்பட்டபோது எடுக்கப்பட்ட போட்டோ.
2007ல் மீண்டும் பறக்க விடப்பட்டபோது எடுக்கப்பட்ட போட்டோ. 14 ஆண்டுகள் தரையில் நிறுத்தி வைக்கப்பட்டபின், வானில் பறந்த விமானத்தை வரவேற்கிறார்கள், இந்த விமானம் மீண்டும் பறக்க விடப்பட வேண்டும் என பிரஷர் கொடுத்தவர்கள்.
2007ல் மீண்டும் பறக்க விடப்பட்டபோது, விமானத்தை செலுத்திய விமானிகள், Al McDicken, David Thomas மற்றும் Barry Masefield.
2007ல் மீண்டும் பறக்க விடப்படுவதற்காக திருத்த வேலைகள் செய்யப்படும் காட்சி இது. Bruntingthorpe Airodromeல், திருத்த வேலைகள் செய்யப்பட்டு, விமானம் மீண்டும் பறப்பதற்கான இன்ஸ்பெக்ஷன் செய்யப்பட்டது.
2007ல் மீண்டும் பறக்க விடப்படுவதற்காக திருத்த வேலைகள் செய்த மெக்கானிக்குகள், விமானம் தயாரானதும் விமானத்துடன் நின்று எடுத்துக்கொண்ட போட்டோ இது.
உலக யுத்தத்தின்போது பிரிட்டிஷ் படைகளில் யுத்தம் புரிந்தவர்களில் உயிருடன் இருப்பவர்கள், சரித்திரத்தில் ஆர்வம் உள்ளவர்கள், பிரிட்டிஷ் பெருமை பேசுபவர்கள் என்று பலதரப்பட்ட ஆட்களும், இந்த விமானத்தை தொடர்ந்து பறக்க வைப்பதில் பிடிவாதமாக இருந்தார்கள். விமானம் தயாரானதும், அதைக் காண திரண்டு வந்த மக்களில் ஒருபகுதி.
2007ம் ஆண்டு பார்ன்பரோ ஏர்ஷோவில் மற்றைய விமானங்களுக்கு மத்தியில் நடுநாயகமாக பறக்கும் ஆவ்ரோ வொல்கன் விமானம். அருகே பறப்பவை, ராயல் ஏர்போர்ஸ் ரெட் அரோ விமானங்கள்
2007ம் ஆண்டு பார்ன்பரோ ஏர்ஷோவில் மற்றைய விமானங்களுக்கு மத்தியில் நடுநாயகமாக பறக்கும் ஆவ்ரோ வொல்கன் விமானம்.
ஆவ்ரோ வொல்கன் விமானத்தின் காக்பிட்டின் பின்புறம், உள்ள விமானிகள் ரெஸ்ட் ஏரியாவின் பனோரமா தோற்றம்.
ஆவ்ரோ வொல்கன் விமானத்தின் காக்பிட்டின் பனோரமா தோற்றம்.
ஆவ்ரோ வொல்கன் விமானத்தின் மேக்சிமம் Payload இது. அதாவது, இந்த விமானத்தில் அதிகபட்சம் எடுத்துச் செல்லக்கூடிய குண்டுகள்.
உலக யுத்த நாட்களில், பிரிட்டிஷ் விமானப்படையின் ஆவ்ரோ வொல்கன் ரக விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளானபோது எடுக்கப்பட்ட போட்டோ.
உலக யுத்த நாட்களில், ஆவ்ரோ வொல்கன் விமானம் ஒன்று ‘டக்’ மூலம் இழுத்து வரப்படும் காட்சி இது.
உலக யுத்தத்தின்போது, புறப்படத் தயாராக வரிசையின் நிற்கும் பிரிட்டிஷ் ராயல் விமானப்படை விமானங்கள்.
உலக யுத்தத்தின்போது, ஜெர்மன் படைகளால் கைப்பற்றப்பட்ட லிபியாவின் பெர்க்கா பகுதியில், பிரிட்டிஷ் விமானப்படையின் ஆவ்ரோ வொல்கன் விமானம் குண்டுவீசிவிட்டு சென்றபின், ஜெர்மன் ராணுவத் தளம் எரியும் காட்சி.
ஆவ்ரோ வொல்கன் விமானம் டேக் ஆஃப் செய்யும் காட்சி. இந்த விமானத்தில் பராமரிப்பதற்கு மிகவும் செலவு பிடிப்பது, இதன் விங்ஸ்தான். காரணம், விமானத்தின் எலிவேஷன் இயக்கம் முழுமையாக இந்த விங்குகளில் இருந்து கன்ட்ரோல் செய்யப்படுகிறது.
பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சு தமது பட்ஜெட்டில், இந்த விமானத்தின் பராமரிப்புக்கு இனியும் பணம் ஒதுக்க முடியாது என்று கூறிவிட்டது. அதனால், பிரிட்டிஷ் ராயல் விமானப்படையின் இறுதி ஆவ்ரோ வொல்கன் XH558 ரக விமானம், தனது இறுதிப் பறத்தலை நடத்தவுள்ளது. அத்துடன், ராயல் பிரிட்டிஷ் விமானப்படையின் உலக யுத்த காலத்து குண்டுவீச்சு விமானங்களின் சரித்திரம் முடிவுக்கு வரும்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!