பூமியை தாக்ககூடிய விண்கற்களை அழிக்க விண்ராக்கெட்டுகளை தயார் செய்கிறது ரஷ்யா
பூமியை தாக்கி மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விண்கற்களை அழிப்பதற்காக விண்ராக்கெட்டுகளை தயார் செய்ய ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
பூமியை தாக்கி மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய விண்கற்கள் விண்வெளியில் இருக்க கூடும்.
அவற்றை பூமிக்கு வெளியே விண்வெளியிலேயே மறித்து வெடிக்க செய்வதன் மூலம் திசை திருப்பவோ அல்லது முழுவதுமாகவோ அழிக்ககூடிய விண்ராக்கெட்டுகளை தயாரிப்பதற்கு ரஷ்யா திட்டமிட்டுள்ளது.
இத்தகவலை ரஷ்யாவின் பிரதான ராக்கெட் மற்றும் விண்வெளி ஆய்வு அமைப்பான Energia தெரிவித்துள்ளது.
விண்வெளியில் Apophis உட்பட மிகப்பெரிய 3 விண்கற்களின் பயணப்பாதை(Orbit) பூமியின் சுற்றுப் பாதையில் இன்னும் சில தசாப்தங்களில் குறுக்கிட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பூமியின் சுற்றுப் பாதைக்குள் வரும் இந்த விண்கற்கள் பூமியுடன் மோதுவதற்கான சாத்தியக் கூறு மிக அதிகமாகவே உள்ளது.
இதனால் இவற்றை வழியில் மறித்து சிதைக்காமல் விட்டால் அவை மிகப் பெரிய அழிவை ஏற்படுத்தக் கூடும் என்பதுடன் கடலில் இவை முழுமயாக விழுந்தால் சுனாமி ஏற்படக் கூடும் எனவும் எச்சரிக்கப்படுகின்றது.
Apophis-ற்குச் சமனான குறுங்கோள் ஒன்றுடன் மோதி அதன் பயணப் பாதையை மாற்றுவதற்கு 70 டன் TNT வெடிமருந்துடன் கூடிய ஏவுகணை தேவைப்படுகின்றது.
எனவே இந்த விண்கல்லை திசை திருப்ப RD-171 ரக ஏவுகணையால் முடியும் எனவும், Energia இவற்றை இன்னமும் மூன்று அல்லது ஐந்து வருடங்களில் தயாரித்து விடும் எனவும் லொபொட்டா கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில், இந்த ஏவுகணைகளை தாம் Tsar Engines என அழைப்பதாகவும், இந்த ரக ஏவுகணைகளை இதுவரை வேறு எந்த நாடும் செய்ததில்லை எனவும் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!