எச்சரிக்கை : வேண்டாம் நாய்களுக்கு KISS பண்ணாதீர்கள்
நாய்களை முத்தமிட்டால் அதன் வாய்பகுதியில் உள்ள பக்டீரியாக்கள் மனிதர்களின் பல் ஈறுகளில் நோய்களை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
66 நாய்கள் மற்றும் அவற்றை வளர்க்கும் 81 பேரிடம் ஜப்பான் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் பல நாய்களுக்கு அதன் வாய்பகுதியில் ஏராளமான பக்டீரியாக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் இந்த நாய்களை கொஞ்சி விளையாடும் அதன் எஜமானர்களுக்கு பக்டீரியா தொற்று ஏற்பட்டு பல் ஈறுகளில் நோய் இருந்தது தெரியவந்துள்ளது.
இது குறித்து அமெரிக்க கால்நடைதுறை மருத்துவர் ஆன் ஹோகன்ஹாஸ், ஜப்பான் விஞ்ஞானிகளின் இந்த ஆய்வு நாயிடம் உள்ள அன்பை குறைக்க வழிவகை செய்யும் என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!