Thursday, October 25, 2012

இந்தியா தான் எங்களுடைய கூட்டாளி: பகிரங்கமாக அறிவித்தது சீனா

இந்தியா தான் எங்களுடைய கூட்டாளி: பகிரங்கமாக அறிவித்தது சீனா





இந்தோ- சீனா போர் நடந்து அரை நூற்றாண்டுகளை கடந்துள்ள நிலையில் இந்தியா தனது நட்பு நாடு என பகிரங்கமாக சீனா அறிவித்துள்ளது.
கடந்த 1962ம் ஆண்டு நடந்த இந்திய சீன போரில் பங்கேற்று உயிர்நீத்த வீரர்களின் நினைவாக அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கடந்த 20ம் திகதி புதுடெல்லியில் நடந்தது.

இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்டு உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், இந்நிகழ்ச்சி குறித்து சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஹாங் லீ, தற்போதைய சூழலில் உலகம் பெரும் மாற்றங்களை சந்தித்து விட்டது.

வேகமாக வளர்ந்து வரும் இந்தியா, சீனா வளர்ச்சிக்கான வாய்ப்புகளை தேடி வருகின்றன.

தற்போதைய சூழலில், சீனா இந்தியாவை ஒரு கூட்டாளியாகத்தான் பார்க்கின்றதே அன்றி எதிரியாக பார்க்கவில்லை என்றார்.

இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்ற சீனா எப்போதும் தயாராக இருப்பதாகவும் லீ தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!