3 வீரர்களுடன் இன்று விண்வெளிக்கு பயணமாகிறது சோயூஸ் விண்கலம்
ரஷ்யாவின் சோயூஸ் விண்கலம் மூன்று வீரர்களுடன் இன்று விண்ணில் செலுத்தப்படுகிறது.
அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் ஒன்றிணைந்து பூமிக்கு மேல் 410 கி.மீ உயரத்தில் சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளன.
இந்த செயற்கை விண்வெளி நிலையத்தில் விண்வெளி வீரர்கள் தங்கி ஆய்வு மற்றும் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர், பிராண வாயு போன்றவை ரஷ்யா மற்றும் அமெரிக்க விண்கலங்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
ரஷ்யாவின் சோயூஸ் விண்கலம் கடந்த ஜூலை மாதம் 15ஆம் திகதி விண்ணில் செலுத்தப்பட்டது. அமெரிக்காவின் சார்பில், சுனிதா வில்லியம்ஸ் மற்றும் ரஷ்ய, ஜப்பானிய வீரர்கள் இதில் பயணித்தனர்.
இதற்கிடையே சோயூஸ் விண்கலம் மூலம் மூன்று விண்வெளி வீரர்கள் இன்று விண்வெளிக்கு பயணமாகின்றனர்.
விண்வெளிக்கு புறப்படும் அமெரிக்க வீரர் போர்டு விண்கலத்தை இயக்கும் விமானியாக செல்கிறார்.
சர்வதேச விண்வெளி நிலையம் அமைக்கப்பட்டு 12 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை இந்த நிலையத்திற்காக ஆறு லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!