Tuesday, October 1, 2013

அமெரிக்காவில் அரசு நிறுவனங்கள் தற்காலிகமாக மூடல்! 8 லட்சம் ஊழியர்கள் வேலை இழப்பு!!

அமெரிக்காவில் அரசு நிறுவனங்கள் தற்காலிகமாக மூடல்! 8 லட்சம் ஊழியர்கள் வேலை இழப்பு!!



நிதி நெருக்கடியால் அமெரிக்காவில் அரசு நிறுவனங்கள் தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் சுமார் 8 லட்சம் ஊழியர்கள் 6 மாத காலம் வேலை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் பட்ஜெட்டில் சுகாதார நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் தரப்படவில்லை. இதைத் தொடர்ந்து அரசு நிறுவனங்களை தற்காலிகமாக மூட வெள்ளை மாளிகை உத்தரவிட்டுள்ளது.

அந்நாட்டில் கடந்த 17 ஆண்டுகளுக்குப் பிறகு அரசு நிறுவனங்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிறுவனங்களில் பணியாற்றிய 8 லட்சம் ஊழியர்களுக்கு 6 மாத காலம் ஊதியமில்லா கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் அத்தியாவசியப் பணிகளுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!