Monday, September 30, 2013

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் மேகான் உலக அழகியாக தேர்வு

பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் மேகான் உலக அழகியாக தேர்வு



பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே இந்தோனேசியாவில் நடந்த உலக அழகி போட்டியில், பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மேகான் யங் உலக அழகியாக வெற்றி பெற்றார். இந்தியா சார்பில் போட்டியிட்ட அழகி நவ்னீத் கவுர் இறுதி சுற்றுக்கு தகுதி பெறவில்லை. இந்தோனேசியாவில் 3 வாரங்களுக்கு முன்பு உலக அழகி போட்டி தொடங்கியது. முஸ்லிம்கள் பெரும்பான்மையானோர் வசிக்கும் இங்கு, உலக அழகி போட்டி நடத்துவது மதக்கொள்கைக்கு எதிரானது; வெட்கக்கேடானது என்று கூறி முஸ்லிம் பாதுகாப்பு முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போரா ட்டம் நடத்தினர். மேலும், சகோதரத்துவம், கலாசாரம் ஆகியவற்றை வலியுறுத்தி முஸ்லிம் இளம்பெண்களுக்கு என தனியாக உலக அழகி போட்டியும் நடத்தினர்.

எனினும், பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையே உலக அழகி போட்டியின் இறுதி சுற்று, இந்துக்கள் அதிகம் வசிக்கும் பாலி தீவில் நேற்று நடந்தது. போட்டி நடைபெறும் இடத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந் தது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த 127 அழகிகள் இந்த போட்டியில் பங்கேற்றனர். இறுதி சுற்றில் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த மேகான் யங் (23) உலக அழகியாக தேர்வு செய்யப்பட்டார். இவர் அமெரிக்காவில் பிறந்தவர். டிஜிட்டல் பிலிம் தொழில்நுட்பம் பயின்று வருகிறார். 

கடந்த ஆண்டு உலக அழகியாக தேர்வு செய்யப்பட்ட சீன அழகி வென்சியா யூ, அழகி பட்டத்தை மேகா னுக்கு சூட்டினார். மருத்துவ மாணவிகள் பிரான்ஸ்சை சேர்ந்த மெரின் லார்ப் ஹெலின் (20), கானாவை சேர்ந்த கரான்ஷர் நா ஒஹாலி ஷூட்டர் (23) ஆகியோர் முறையே 2வது மற்றும் 3வது இடத்தை பிடித்தனர்.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவை சேர்ந்த அழகி நவ்னீத் கவுர், பல சுற்று போட்டிகளில் வென்று டாப் 20 அழகிகள் பட்டியலில் இடம் பிடித்தார். ஆனால், டாப் 10 பட்டியலில் இடம்பெறவில்லை. எனினும், Ôமிஸ் வேர்ல்ட் வெப்சைட்Õ மற்றும் பேஸ்புக் பக்கங்களில் ரசிகர்களுடன் நடந்த கலந்துரையாடல், வெளியிட்ட படங்களுக்கு கிடை த்த ஆதரவின் அடிப்படையில் Ôமல்டி மீடியாÕ விருது அவருக்கு வழங்கப்பட்டது.

எக்ஸ்ட்ரா தகவல்

உலக அழகி பட்டத்தை இந்தியாவை சேர்ந்த ரீட்டா பரியா(1966), ஐஸ்வர்யா ராய்(1994), டயானா ஹைடன்(1997), யுக்தா முகி(1999), பிரியங்கா சோப்ரா(2000) ஆகியோரும் பிரபஞ்ச அழகி பட்டத்தை சுஷ்மிதா சென்(1994), லாரா தத்தா(2000) பெற்றுள்ளனர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!