தங்க பொக்கிஷத்தை கொண்ட தீவு விற்பனை
அமெரிக்க கனக்ரிகட்டிலுள்ள தனியார் தீவொன்று 3.95 மில்லியன் அமெரிக்க டொலருக்கு விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.
பிரான்போர்ட் நகர கடற்கரைக்கு அப்பால் அமைந்துள்ள திம்பிள் தீவுக் கூட்டத்தில் ஒரு தீவான ஒரு ஏக்கர் நிலப் பரப்பை மட்டுமே கொண்ட பெல்டென் தீவே இவ்வாறு விற்பனைக்கு விடப்பட்டுள்ளது.
17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கடற்கொள்ளையர்களின் கப்பல் தலைவனான கிட் இந்த தீவில் பெருமளவு தங்கத்தை புதைத்து வைத்துள்ளதாக வதந்திகள் உலாவுகின்றன.
இந்தத் தீவின் தற்போதைய உரிமையாளரான கிறிஸ்ரின் சவென்னிங்ஸென் மேற்படி தீவை 2006 ஆம் ஆண்டில் 2.66 மில்லியன் அமெரிக்க டொலருக்கு வாங்கியிருந்தார்.
இந்த தீவில் 100 ஆண்டுகள் பழைமையான 7 அறைகளைக் கொண்ட பண்ணை வீடொன்று அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!