Monday, September 30, 2013

மனிதனை போல ரோபாட்டுக்கு மூளை அமெரிக்க பல்கலையில் தமிழர் கண்டுபிடிப்பு

மனிதனை போல ரோபாட்டுக்கு மூளை அமெரிக்க பல்கலையில் தமிழர் கண்டுபிடிப்பு




சொன்னதை செய்யும் ரோபாட்டைதான் (எந்திர மனிதன்) இதுவரை கண்டிருக்கிறோம். இனி, சொல்லாததையும் செய்யும் மனிதனை போல மூளையுள்ள ரோபாட்டை காணப்போகிறோம். ஆம், ரோபாட்டுக்கு மனிதனை போல தன்னிச்சையாக செயல்பட  மூளையை கண்டுபிடித்துள்ளார் அமெரிக்காவில் புகழ் பெற்ற இந்திய வம்சாவளி தமிழ் விஞ்ஞானி ஜகன்னாதன் சாரங்கபாணி. மிசோரி அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பல ஆராய்ச்சிகளை செய்து பெருமை பெற்றவர். 

ஜகன்னாதன் ரோபாட் பற்றி பல ஆண்டாக ஆராய்ச்சி செய்து வருகிறார். அவர் தலைமையிலான குழுவினர் பல வகையில் ரோபாட் செயல்பாடுகளை கணக்கிட்டு, அதற்கு தனி கட்டளைகளை பிறப்பித்து, தானியங்கி முறையில் மட்டுமின்றி, சுயமாக சிந்தித்து, குறைந்தபட்ச செயல்பாடுகளை மேற்கொள்ள வைத்தனர். இதில் ஜகன்னாதன் வெற்றி கண்டுள்ளார். ரோபாட் சுயமாக சிந்தித்து, செயல்படக்கூடிய அளவில் அதற்கு மனிதர்களுக்கு உள்ளதை போல மூளையை கண்டுபிடித்துள்ளார். எல்லா கன்ட்ரோல்களையும் மூளையில்வைத்து, மனிதனை போலவே சிந்திக்கும் அளவுக்கு, புரிந்து கொள்ளும் அளவுக்கு ரோபாட்டின் செயல்பாட்டை மாற்றியமைத்துள்ளார். 

சோதனை ரீதியாக ரோபாட்டுக்கு மூளையை பொரு த்தி செயல்படுத்தியபோது, ரோபாட்டுக்கு இலக்கை மட்டும் கமாண்ட் செய்து விட்டால் அதை  அடைய மனிதனை போல தானாகவே சிந்தித்து, செயல்பட முடியும் என்பதில் ஏறக்குறைய வெற்றி கண்டுள்ளார். ரோபாட்டுக்கு அவர் கண்டுபிடித்த மூளையை பொருத்துவதில் படிப்படியாக மேலும் வெற்றி கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த ஜகன்னாதன், எதிர்காலத்தில் ரோபாட்டால், மனிதனை போல சிரிக்க முடியும்; கோபப்பட முடியும். ஏன், முகபாவத்தை கூட காட்ட  முடியும் என்று உறுதியுடன் கூறுகிறார். 

பாலம் கட்டுவது, மேம்பாலம்  அமைப்பது போன்ற இடங்களில் ஒரே நேரத்தில் பத்து புல்டோசர்களை இயக்க வேண்டும் என்றால், அதில் உள்ள பழுதுகளை கண்டுபிடிக்க வேண்டும், அதை சரி செய்யவும் வேண்டும் என்றால் இந்த மூளையுள்ள ரோபாட்களை பயன்படுத்தலாம். அது தான்  என் குறிக்கோள்’ என்றும் அவர் கூறினார். 


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!