ரஷ்ய விமானநிலைய கிடங்கில் ரூ 1.69 லட்சம் கோடி... சதாம் ஹூசேனுடையதா?
ரஷ்ய விமான நிலையத்தில் கேட்பாரற்று கடந்த 6 ஆண்டுகளாகக் கிடக்கும் சுமார் 1.69 லட்சம் கோடி ரூபாய் ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு சொந்தமானதா? என்ற சந்தேகத்தை இங்கிலாந்து பத்திரிகை ஒன்று கிளப்பியுள்ளது.
இங்கிலாந்தின் பிரபல பத்திரிகையான 'மிரர்' சமீபத்தில் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், கடந்த 2007ம் ஆண்டு, ஜெர்மனியில் உள்ள பிராங்பர்ட் விமான நிலையத்தில் இருந்து பார்சின் மோட்லாக் என்ற மாபியா அசாமி ஒருவன் ரஷ்யாவில் உள்ள ஷெரமெட்யெவோ விமான நிலையத்திற்கு அனுப்பியது தான் இந்தப்பணம்.
பணத்தை அனுப்பிய ஆசாமியும் பணம் சரியான இடத்தில் சென்று சேர்ந்து விட்டதா என விசாரிக்கவில்லை, பணத்தை உரிமை கொண்டாடி பெற்றுக் கொள்ளவும் யாரும் வரவில்லை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனராம்.
இதனால், கடந்த 6 ஆண்டுகளாக அந்த பார்சல் கேட்பாரற்று ரஷ்ய விமான நிலைய கிடக்கில் பாதுகாக்கப் பட்டு வருகின்றது. பணம் முழுவதும் 100 யூரோக்கள் கொண்ட கட்டுகளாக பார்சல் செய்யப்பட்டுள்ளது.
பணம் ஈரான் நபர் ஒருவரால் அனுப்பப் பட்டுள்ளதாக ரசீதுகளில் குறிப்பிடப் பட்டுள்ளதால், இந்த பணத்தை ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் தனது எதிர்கால தேவைக்காக தந்தனுப்பியிருக்கக் கூடும் என அந்த பத்திரிகை சந்தேகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!