சபரிமலை அய்யப்பன் கோவிலில் பொன்னம்பலமேட்டில் தெரிந்த மகரஜோதியை பல லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
அய்யப்பன் கோவில் மண்டல பூஜை கடந்த 26-ந் தேதி நடைபெற்றது. பின்னர் 30-ந்தேதி மகரவிளக்கு பூஜை நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.
மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு நேற்று சபரிமலையில் அளவுகடந்த கூட்டம் அலைமோதியது. முதலில் அய்யப்பனுக்கு பந்தளத்தில் இருந்து ஊர்வலமாகக் கொண்டுவரப்பட்ட திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டன. பின்னர் தொடர்ந்து பூஜைகள் நடத்தப்பட்டன. மாலை 6.30 மணியளவில் சபரிமலை அய்யப்பனுக்கு தீப ஆராதனை காட்டப்பட்டது.
தீப ஆராதனை காட்டப்ப்ட்ட அதே நேரத்தில் பொன்னம்பலமேட்டில் 'மகர ஜோதி' தெரிந்தது. அப்போது திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் "சுவாமியே சரணம் அய்யப்பா" என விண்ணைப் பிளக்கும் வகையில் சரணகோஷம் எழுப்பினர்.
மகர ஜோதி பூஜையை முன்னிட்டு சபரிமலைப் பகுதியில் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!