அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு 1060 காளைகள் தயார்
அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்க 1060 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 1,240 மாடுபிடி வீரர்களும் பதிவு செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் பாலமேட்டில் நாளை (15ம் தேதி), அலங்காநல்லூரில் 16ம் தேதி ஜல்லிக்கட்டுகள் நடைபெற உள்ளன. இதற்கான முன்னேற்பாடுகளை மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, கருப்பையா எம்ஏல்ஏ மற்றும் விழாக்குழுவினர்,
''ஜல்லிக்கட்டை காலை 9 மணிக்கு துவங்கி 3 மணிக்கு முடித்துக்கொள்வதாக தெரிவித்தனர். இந்த கோரிக்கையை கலெக்டர் ஏற்றுக்கொண்டார். ஜல்லிக்கட்டு நடைபெறும் பகுதிகளில் எஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் 20 டிஎஸ்பிக்கள், 60 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். வீரர்கள் பதிவு விபரம்: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 560 காளைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இங்கு காளைகளை அடக்க 600 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.
பாலமேடு ஜல்லிக்கட்டில் 500க்கும் மேற்பட்ட காளைகள் இதுவரை பதிவு செய்துள்ளன. இங்கு 640 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். விலங்கு நல வாரியத்தால் அங்கீகரிக்கப்பட்டு நிரந்தர பதிவெண் கொண்ட காளைகள் மட்டுமே தற்போது நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இக்காளைகளுக்கு ஜல்லிக்கட்டு நாளில் உடல் திறன் சோதனை கால்நடை நோய் புலனாய்வு பிரிவை சேர்ந்த மருத்துவ குழுவினர் நடத்துவர். மதுபான சோதனையை ‘பி.எச்‘ பேப்பர் மூலம் கண்டுபிடிக்கப்படும். 100க்கும் மேற்பட்ட மருத்துவகுழுவினர், டாக்டர்கள், நர்ஸ்களும் 15 ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் இருக்கும்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!