Friday, January 18, 2013

லண்டனில் நாளை கார் ஓடவேண்டாம் ! அபாய எச்சரிக்கை !

லண்டனில் நாளை கார் ஓடவேண்டாம் ! அபாய எச்சரிக்கை !



இன்று நள்ளிரவு முதல் , லண்டனை கடும் குழிர் தாக்கவுள்ளது. பிரித்தானியாவின் ஏனைய பகுதிகளான மிட்லான்ஸ், வேல்ஸ் மற்றும் ஸ்காட்லான் ஆகிய பகுதிகளை ஏற்கனவே கடும் குழிரும் பனியும் தாக்கியுள்ள நிலையில், இந்த அவரச அறிவிப்பு காலநிலை அவதானிப்பு நிலையத்தால் விடுக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் லண்டன் வெப்ப நிலை மயினஸ்(- 5 வரை) செல்லலாம் எனவும், மற்றும் கடும் பனிப் பொழிவு காணப்படும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதனால் சுமார் 8 தொடக்கம் 10 சென்ரி மீட்டர் உயர பனி வீதிகளில் இருக்க கூடும் எனவும் கூறப்படுகிறது. மேலும் பிளக் ஐஸ்( கறுப்பு பனி) என்று சொல்லக்கூடிய பழிங்குபோன்ற ஐஸ் படிமங்கள் வீதிகளில் படரும் என்பதால் வாகனம் ஓட்டுபவர்கள் மிகவும் அவதானமாக இருப்பது நல்லது.

முடிந்தவரை பிரயாணங்களைத் தவிர்ப்பது நல்லது என்றும் அறுவுறுத்தப்பட்டுள்ளது. வெள்ளி , சனி ஞாயிறு மற்றும் திங்கள் கூட பாரிய பனிப் பொழிவுகள் காணப்படும் என பிரித்தானிய காலநிலை அவதானிப்பு மையம் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே பிரித்தானியா வாழ் எமது உறவுகளே, இன்றே வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்தல் நல்லது. மற்றும் டெஸ்கோ சூப்பர் மார்கெட் செல்பவர்கள் மேலும் கவனம் ! பனி தாக்குவதை விட டெஸ்கோ சூப்பர் மார்கெட்டில் குதிரை தாக்குவது தான் கடினமாக உள்ளது. என்னடா குதிரை என்று யோசிக்கிறீர்களா ? ஆம் டெஸ்கோ சூப்பர் மார்கெட் தற்போது தனது வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளது. ஏன் எனில் அவர்கள் விற்றுவந்த பீஃப் பேர்கர்(மாட்டிறைச்சி) க்குப் பதிலாக, குதிரை இறைச்சியை விற்றுவிட்டார்களாம்.

அதாவது குறிப்பிட்ட சப்பிளையர், மாட்டிறைச்சிக்கு பதிலாக குதிரை இறைச்சியை பேர்கராக்கி அதனை பாக் செய்து டெஸ்கோவுக்கு அனுப்பியுள்ளார். டெஸ்கோவுக்கு போறாத காலம். ஆஸ்டா போன்ற சூப்பர் மார்கெட்டுகள் இச் செய்திகேட்டு புன்னகையோடு இருக்கிறது !

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!