கப்பல்கள் மோதல் 13 ஊழியர்கள் மாயம்
சரக்குக் கப்பலுடன், சிறிய மீன் பிடிக்கப்பல் மோதி விபத்துக்கு உள்ளானதில் 13 மீனவர்களைக் காணவில்லை என்று ஜப்பான் கடலோரக் காவல் படை தெரிவித்துள்ளது. 22 ஊழியர்களுடன் சென்ற 119 டன் எடை கொண்ட ஹோரியி மரூ என்ற மீன்பிடிக் கப்பலும், 25,047 டன் எடை கொண்ட நிக்கி டைகர் என்ற சரக்குக் கப்பலும் நேற்றுமுன்தினம் மோதிக்கொண்டன. சென்டய் நகரிலிருந்து 900 கி.மீ. தொலைவில் இந்த விபத்து ஏற்பட்டது.
இதில் மீன்பிடிக் கப்பல் சேதமடைந்து கடலில் மூழ்கியது. மூழ்கிய கப்பலில் இருந்த 9 பேர் மீட்கப்பட்டனர். எஞ்சிய 13 பேரை தேடும் பணியில் கடலோரக் காவல் படையைச் சேர்ந்த 2 விமானங்கள் ஈடுபட்டுள்ளன. சரக்குக் கப்பலில் சென்ற 21 ஊழியர்கள் பத்திரமாக உள்ளனர்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!