வங்கக் கடலில் புயல் சின்னம்: தமிழகத்துக்கு கனமழை எச்சரிக்கை
வங்கக் கடலில் தென் பகுதியில் புயல் சின்னம் உருவாகியுள்ளதால் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இலங்கை கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இப்போது வங்கக்கடலில் புதிதாக குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது.
இது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும் வாய்ப்புள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில்,
தென் வங்க கடலின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இது தமிழகத்தில் இருந்து வெகு தொலைவில் நிலை கொண்டுள்ளதால் இது மேலும் வலுப்பெற்று தமிழகத்தை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தமிழகத்தில் அடுத்த 2 நாட்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று எச்சரித்துள்ளனர்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!