Monday, October 21, 2013

ஒரு கோடி அமெரிக்க டொலர் (சுமார் 131 கோடி இலங்கை ரூபா, 60கோடி இந்திய ரூபா)) பெறுமதியான பிரா

பிரபல உள்ளாடைத் தயாரிப்பு நிறுவனமான விக்டோரியா சீக்ரெட்ஸ் நிறுவனம் நடத்தும் வருடாந்த கண்காட்சியில்



ஒரு கோடி அமெரிக்க டொலர் (சுமார் 131 கோடி இலங்கை ரூபா, 60கோடி இந்திய ரூபா)) பெறுமதியான பிராவை அணிந்து காட்சிப்படுத்துவதற்கு மொடல் அழகி கென்டிஸ் ஸ்வான்போல் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட விக்டோரியா சீக்ரெட்ஸ் நிறுவனம் வருடாந்தம் நியூயோர்க் நகரில் மாபெரும் உள்ளாடை தயாரிப்புக் கண்காட்சியை நடத்துகிறது. இக்கண்காட்சியின்போது தங்கத்தில் இரத்தினங்கள் பதிக்கப்பட்ட பல மில்லியன் டொலர் பெறுமதியான ஃபான்டெஸி பிராவையும் அறிமுகப்படுத்துவது வழக்கம்.

இந்த பிராவை அணிந்து நடக்கும் வாய்ப்பை பெறுவதற்கு உலகின் முன்னிலை மொடல் அழகிகள் காத்திருப்பர். உள்ளாடை மொடலிங் துறைக்கான பெரும் கௌரவமாகவும் இது கருதப்படுகிறது.

இம்முறை தென்னாபிரிக்காவைச் சேர்ந்த கென்டிஸ் ஸ்வான் இந்த வாய்ப்பை பெற்றுள்ளார். 18 கரட் தங்கத்தால் உருவாக்கப்பட்ட இந்த பிராவிலும் அதற்குப்பொருத்தமான இடைப் பட்டியிலும் உலகின் பல பாகங்களிலிருந்து பெறப்பட்டஇ வைரங்கள்இ நீலக்கற்கள்இ 4200 இரத்தினக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகப் புகழ்பெற்ற நகை வடிவமைப்பு நிறுவனமான ஆழரயறயன நிறுவனத்தால் விக்டோரியா சீக்ரெட்ஸ் நிறுவனத்துக்காக பிரத்தியேகமாக இந்த பிரா தயாரிக்கப்பட்டுள்ளது. 1996 ஆம் ஆண்டு முதல் தடவை இத்தகைய ஆடம்பர ஃபாண்டெஸி பிராவை விக்டோரியா சீக்ரெட்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியது.

ளோடியா ஷிபர் அந்த பிராவை அணிந்து நடந்தார்.

2000 ஆம் ஆண்டு 1.5 கோடி டொலர் பெறுமதியான பிராவை கிஸெல் பன்ட்சென் அணிந்து நடந்தார்.

கடந்த வருடம் நடைபெற்ற கண்காட்சியில் பிரேஸிலைச் சேர்ந்த அலெக்ஸான்ட்ரியா அம்ப்ரோஸியோ 25 லட்சம் டொலர் பெறுமதியான பிராவை அணிந்தார்.

இம்முறை இந்த வாய்ப்பு கிடைத்தமையால் தான் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளதாக 23 வயதான கன்டிஸ் ஸ்வான் போல் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

‘எனது உடலுக்குப் பொருத்தமான அளவில் பிராவை தயாரிப்பதற்காக எனது உடலின் மாதிரி உருவமொன்றை அவர்கள் செய்யவேண்டியிருந்தது. அப்போதிருந்து இந்த பிராவை அவர்கள் எப்படி செய்வார்கள்?

அது எப்படி காட்சியளிக்கும்? என நான் கற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டேன். இந்தளவு பெறுமதியான ஆடை ஆபரணம் எதையும் நான் ஒருபோதும் அணியவில்லை.

இந்த பிராவுக்குப் பாதுகாப்பாக இரு மெய்ப்பாதுகாவலர்களும் வருவர். இதை நாம் மிகக் கவனமாக கையாள வேண்டியுள்ளது’ எனவும் கன்டீஸ் ஸ்வான்போல் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!