காஸ்ட்லி பிரதமர் மன்மோகன் சிங்கின் வெளிநாட்டு பயண செலவு… ஹம்மா! - கட்டாயம் படிங்க பாஸ் !!!
பிரதமர் மன்மோகன் சிங்கை பிரதமராக வைத்திருப்பது, மிகவும் காஸ்ட்லியான விஷயம் என தெரியவந்துள்ளது. காரணம், பிரதமர் கடந்த 10 ஆண்டுகளில் 70 முறை வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக செலவான மக்களின் வரிப் பணம் 640 கோடி ரூபாய்.
மற்றைய உலக நாடுகளுடன் உறவை பலப்படுத்தவே பிரதமர் 70 தடவைகள் வெளிநாடுகளுக்கு பறக்க வேண்டியிருந்தது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகளுடன் உறவைப் பலப்படுத்த பிரதமரே 70 தடவைகள் பறக்க வேண்டும் என்றால், இதற்காகவென்று பதவியில் உள்ள வெளியுறவு அமைச்சர் எத்தனை தடவைகள் பறந்திருக்க வேண்டியிருந்திருக்கும்?
பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ‘உறவை பலப்படுத்த’ அதிக செலவான நாடு, மெக்சிகோ. பிரதமரின் சிங்கின் சிங்கிள் மெக்சிகோ பயணத்துக்காக மட்டும், 27 கோடி ரூபா செலவாகியது. அதற்கு அடுத்த இடத்தில் உள்ளது பிரதமரின் அமெரிக்கப் பயணம். அதற்கான பில், 23 கோடி ரூபாய்.
பொதுவாக குழந்தைகள் உள்ள குடும்பத்தினர் தமது பயணங்களை கோடை விடுமுறையின் போதே மேற்கொள்வது வழக்கம். அதேபோல நமது பிரதமர் சிங் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள ‘சிறப்பு காலம்’ ஏதாவது உண்டா?
ஆம், உண்டு.
முக்கியத்துவம் வாய்ந்த நாடாளுமன்ற கூட்டத் தொடர்கள் நடந்து கொண்டிருக்கும் போது, 24 முறை வெளிநாடுகளுக்கு பயணம் செய்து உள்ளார் பிரதமர் சிங்.
நாடாளுமன்றத்தில் அமைச்சர்களுக்கெல்லாம் தலைவராக செயல்பட வேண்டிய பிரதமர், நாடாளுமன்ற கூட்டத் தொடர்கள் நடந்து கொண்டிருக்கும் போது, அதற்கு கட் அடித்துவிட்டு, வெளிநாடுகளுக்கு சென்று உலக நாடுகளுடன் உறவை பலப்படுத்திவிட்டு திரும்பியுள்ளார் என்பது பெருமைக்குரிய விஷயம் அல்லவா?
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!