ரூபாய் நோட்ல ஐலவ்யூ சொல்லாதீங்க… செல்லாம போயிடும்!
அட்ரஸ் தொடங்கி ஐலவ்யூ வரை ரூபாய் நோட்டில் கிறுக்கிவைக்காதவர்களே இல்லை எனலாம். அந்த அளவிற்கு துண்டு சீட்டை விட மோசமாக பணத்தை கையாளுகின்றனர்.
இனி பணத்தில் கிறுக்கினால் அது செல்லாது என ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வருகின்ற ஜனவரி 1 ஆம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது.
இதன்படி பேனா, பென்சில், ஸ்கெட்ச், க்ரேயான்ஸ் ஆகிய எழுது பொருட்களால் ரூபாய் நோட்டுக்களில் ஏதாவது எழுதப்பட்ருந்தால், அந்த ரூபாய் நோட்டுக்கள் செல்லாமல் போய்விடும்.
அவசரத்திற்கு அட்ரஸ்
இந்திய இறையாண்மையின் சின்னமாக விளங்கும் ரூபாய் நோட்டுக்களை பெரும்பாலோனோர் அவமரியாதை செய்கின்றனர். அவசரத் தேவைக்கு தொலைபேசி எண்களை எழுதுவதற்கும், முகவரிகளை எழுதுவதற்கும் ரூபாய் நோட்டுக்களை பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர்.
கடவுளை கூப்பிட
சிவ சிவா, ஜீசஸ் நெவர் பெயில்ஸ், காட் பிளஸ் யூ, என்றும் பல வாசகங்களை பணத்தில் எழுதுகின்றனர். கவிதைகள், நடிகர்கள், நடிகைகள் பெயர், விளையாட்டு வீரர்கள் பெயர் போன்றவற்றை கூட எழுதுகின்றனர்.
காதலை சொல்ல
கல்லூரி மாணவர்கள், மாணவிகள் தங்கள் நாண்பர்கள், காதலன், காதலி பெயர்கள், பிறந்த தேதி, ஐ லவ் யூ, ஐ மிஸ் யூ என்று எழுதுகின்றனர்.
கார்ட்டூன் வரைய
சிறுவர்கள் ஸ்கெட்ச், கி கார்ட்டூன் ஓவியங்கள் வரைந்து விளையாடுகின்றனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலும், பணத்தில் கிறுக்கிவைக்கின்றனர். படிக்காதவர்கள் மட்டுமல்லாமல் படித்தவர்களும் பணத்தினை மதிப்பதில்லை.
அரசு நிறுவனங்களில்
ரூபாய் நோட்டுக்களைப் பொறுத்தவரை, மக்கள் மட்டுமின்றி, வியாபாரிகள், வங்கி பணியாளர்கள், தபால் துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட பணம் பட்டுவாடா தொடர்பான பணி மேற்கொள்ளும் அதிகாரிகளே பெரும்பாலும் இந்த தவறைச் செய்கின்றனர்.
சிவப்பு மையில்
ரூபாய் நோட்டு கட்டுகளில் இருக்கும் பணத்தின் எண்ணிக்கையைத் எளிதில் தெரிந்துகொள்ள வசதியாக 25, 50, 75, 100 என்ற எண்களை சிவப்பு, கறுப்பு நிற பேனாவாலும், பென்சிலாலும் குறிப்பிடுகின்றனர். மின் கட்டண மையத்தில் பணம் வசூலிப்பாளரே மக்களிடம் 500, 1,000 ரூபாய் நோட்டுக்களை வைத்திருப்பவர்கள் அதில் மின் இணைப்பு எண்ணை கண்டிப்பாக எழுத வேண்டும் என்று கூறுகின்றனர். இதனால் மக்களும் நோட்டுகளில் பேனாவால் எழுதிவிடுகின்றனர்.
ரிசர்வ் வங்கி
ரூபாய் நோட்டுக்களை மக்கள் பயன்படுத்தும் முறை குறித்து ரிசர்வ் வங்கி இணையதளத்தில், ‘‘இந்திய இறையாண்மையின் சின்னமாக விளங்கும் ரூபாய் நோட்டுக்களை அரசியல் கட்சி தலைவர்களுக்கு மாலையாக அணிவித்து அவமரியாதை செய்யாதீர்கள்‘‘ என்று செய்தி வெளியிட்டிருந்தது.
பணமாலை
ஆனாலும், தேர்தல் நேரங்களில் ரூபாய் நோட்டுக்களை தலைவர்களுக்கு மாலையாக அணிவித்து போட்டா பிடித்துக் கொள்வது தற்பொழுது ஒரு கலாச்சாரமாகவே நிகழ்ந்து வருகிறது.
செல்லாது செல்லாது
இனி பணத்தில் பேனா, பென்சில், ஸ்கெட்ச், க்ரேயான்ஸ் ஆகிய எழுது பொருட்களால் ரூபாய் நோட்டுக்களில் ஏதாவது எழுதப்பட்ருந்தால், அந்த ரூபாய் நோட்டுக்கள் செல்லாமல் போய்விடும். ஜனவரி 1 ஆம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது என ரிசர்வ் வங்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விழிப்புணர்வு வருமா?
அரசு பணப் பட்டுவாடா பிரிவில் இருக்கும் ஊழியர்கள் ரூபாய் நோட்டுக்களில் எழுதுவதையும், எழுதச் சொல்லுவதையும் நிறுத்த வேண்டும். பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி இனிவரும் காலங்களிலாவது ரூபாய் நோட்டுக்களில் எழுதுவது தடுக்கப்படலாம்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!