Monday, October 21, 2013

வருகின்றது சூப்பர் வேக பயணிகள் விமானம்! லண்டன் – சிட்னி வெறும் 2 மணி நேரத்தில்!!

வருகின்றது சூப்பர் வேக பயணிகள் விமானம்! லண்டன் – சிட்னி வெறும் 2 மணி நேரத்தில்!!



பிரிட்டிஷ் நிறுவனம் வெர்ஜின் அட்லான்டிக்குக்கு சொந்தமான தனியார் விண்கலம் SS2, சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது. மொஜாவ் பாலைவனத்தில் இயக்கப்பட்ட டெஸ்ட் பிளைட், விண்வெளி உல்லாசப் பயணத்தின் கதவுகளை திறந்து விட்டுள்ளது.

வெர்ஜின் அட்லான்டிக் விமான நிறுவனத்தின் மற்றொரு ப்ராஜெக்ட், SS2 விண்கலம். விண்வெளியில் உல்லாசப் பயணிகளை ஏற்றிச் செல்வதும், விண்வெளியில் ஹோட்டல் ஒன்றை அமைத்து, உல்லாசப் பயணிகளை அதில் தங்க வைப்பதும் இந்த அட்வென்சர் ப்ராஜெக்ட்டின் நோக்கம்.

மொஜாவ் பாலைவனத்தில் டெஸ்ட் பிளைட்டை செலுத்திச் சென்றவர்கள், விண்வெளி வீரர்களான மார்க் ஸ்டக்கி மற்றும், கிளின்ட் நிக்கோலஸ். SS2 விண்கலத்தை சுமார் ஒரு மணி நேரம் பறக்கவிட்டபின், பத்திரமாக தரையிறங்கினார்கள் இவர்கள்.

SS2 விண்கல சோதனை ஓட்டம் வெற்றிகரமாக அமைந்ததில், தற்போது மற்றொரு சாத்தியத்தை ஆராயத் தொடங்கியுள்ளார்கள். அது என்னவென்றால், இந்த விண்கலத்தின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அதிவேக விமானங்களை தயாரிப்பது. அது நடந்துவிட்டால், நாடுகளுக்கு இடையிலான பயண நேரம், வெகுவாக குறைந்துவிடும்.

உதாரணமாக, தற்போது சோதனை செய்யப்பட்ட SS2 விண்கலத்தின் வேகத்துடன் லண்டனில் இருந்து சிட்னிக்கு (ஆஸ்திரேலியா) ஒரு அதிவேக விமானம் பறக்க விடப்பட்டால், அதன் பயண நேரம் வெறும் 2 மணி நேரமாக இருக்கும்!

தற்போது லண்டனில் இருந்து சிட்னிக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ், அல்லது குவான்டஸ் ஏர்வேஸ் விமான சேவையில் பயணம் செய்தால் (ஏர்பஸ், அல்லது போயிங் விமானங்கள்) பயண நேரம் சுமார் 21 மணிநேரம் 30 நிமிடங்கள். அந்த பயணத்தை வெறும் 2 மணி நேரத்தில் பறக்க முடிந்தால் எப்படியிருக்கும்?

சிவில் விமானப் பயணத்தின் அடுத்த கட்டம், இதுவாகத்தான் இருக்கப் போகிறது.



ஆனால், இதில் ஒரு கேட்ச் இருக்கும். இந்த அதிவேக பயணத்துக்கான டிக்கெட் கட்டணம், வழமையான பயண டிக்கெட்டைவிட சில மடங்கு அதிகமாக இருக்கும்.

முன்பு அதிவேக சூப்பர்சோனிக் கொன்கோர்ட் விமானம் இயக்கப்பட்ட நாட்களில், பாரிஸ் – நியூயார்க் ரூட்டில் ஏர் பிரான்ஸூம், லண்டன் – நியூயார்க் ரூட்டில் பிரிட்டிஷ் ஏர்வேஸூம் சூப்பாசோனிக் விமானங்களை இயக்கின. அவற்றுக்கான கட்டணம், வழமையாக இந்த ரூட்டில் உள்ள பர்ஸ்ட் கிளாஸ் டிக்கெட் கட்டணத்தைவிட அதிகம்!

இதுவும், அப்படியொரு ‘உயர்ந்த கட்டணத்தில்’ இயக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

சரி. விமானம் ஏறத்தானே அப்படி கட்டணம். போட்டோ பார்ப்பது இலவசம் அல்லவா? SS2 விண்கல சோதனை ஓட்டத்தின் போது எடுக்கப்பட்ட சில போட்டோக்களை தொகுத்து தருகிறோம், பார்த்து வையுங்கள்.

இன்னும் சில வருடங்களில் பயணிகள் விமானங்களும் இந்த ஷேப்பில் பறக்கப் போகின்றன. நீங்கள் முதலிலேயே பார்த்து விடுங்கள். 



No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!