Tuesday, July 16, 2013

மனுஷங்கதான் பழசை சீக்கிரமா மறந்துடுவாங்க... யானைங்க அப்படி இல்லையாம்!

மனுஷங்கதான் பழசை சீக்கிரமா மறந்துடுவாங்க... யானைங்க அப்படி இல்லையாம்!




பழைய நண்பர்களை மறக்காமல் அப்படியே நினைவு வைத்திருப்பதில் யானைகள்தான் பெஸ்ட்டாம். ஒரு ஆய்வு சொல்கிறது. நண்பர்களை மறப்பது இப்போதெல்லாம் பேஷனாகி விட்டது. நமக்காக அவர்கள் செய்த விஷயங்களை மறப்பது ரொம்பச் சுலபமாகி விட்டது. இந்த நிலையில் யானைகள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை ஒரு ஆய்வு வெளிக்கொணர்ந்துள்ளது.

பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு ஆய்வுக் குழு, யானைகளின் குணாதிசயம் குறித்த விவரங்களை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது.

மறக்காத நினைவுகள் 

யானைகளைப் பொறுத்தவரை அதன் மனதில் ஒரு விஷயம் பதிந்து விட்டால் சாகும் வரைஅதை மறக்காதாம். குறிப்பாக பழகிய பழக்கத்தை, நண்பர்களை அது மறக்கவே மறக்காதாம்.

பழகுவதில் விருப்பம் 

மனிதர்களைப் போலவே யானைகளும் கூட நட்பை விரும்புகின்றனவாம். நிறைய யானைகளுடன் பழக வேண்டும் என்பதே ஒவ்வொரு யானையின் மன நிலையாகவும் இருக்கிறதாம்.

ஹாய் ஹாய்... 

தான் பழகிய யானையை எங்காவது பார்த்து விட்டால் உடனே அருகில் ஓடிப் போய் நட்பு பாராட்டத் தவறாதாம் யானைகள். பழகிய பழக்கத்தை மறக்கவும் செய்யாதாம்.

கூட்டம் கூட்டமாக 

யானைகள் எப்போதுமே சிறு சிறு கூட்டமாகத்தான் இருக்கும். யானைகளுக்குத் தனிமை பிடிக்காதாம். குறிப்பாக பெண் யானைகளுடன் இருப்பதையே ஆண் யானைகள் அதிகம் விரும்புமாம்.

வயசாயிட்டா தனியாப் போய்டும் 

அதேசமயம் வயதான யானைகள் தனிமையை அதிகம் விரும்புமாம். அவை தனித்தே இருக்கவும் விரும்புமாம்.

உற்றார் உறவினர் மற்றும் நண்பர்கள் 

பெண் யானைகளைப் பொறுத்தவரை தன்னுடைய குடும்ப உறுப்பினர்களை விட நண்பர்களுக்குத்தான் அதிக மதிப்பு கொடுக்கின்றனவாம். எப்போதும் நண்பர்கள், உறவினர்கள் புடை சூழ இருக்க வேண்டும் என்றே அவை விரும்புகின்றனவாம்.

வாசனையை வைத்தே 

தனக்குப் பழக்கமான யானை தூரத்தில் இருந்தாலும் கூட வாசனையை வைத்தே கண்டுபிடித்து அங்கு ஓடி விடுமாம் யானைகள்.

100 யானைகளிடம் ஆய்வு 

இந்த ஆய்வுக்காக இலங்கையில் உள்ள உடா தேசிய பூங்காவில் உள்ள 100 பெண் ஆசிய யானைகளிடம் சோதனை நடத்தினர். 20 மாதமாக இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. பரவாயில்லையே.. பழசை மறக்காமல் இருப்பதில் நம்மளை விட யானைங்க ரொம்ப தேவலாம் போல!


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!