Monday, July 15, 2013

ஃபேஸ்புக் போட்டோவில் அழகாகத் தோன்ற என்னவெல்லாம் செய்கிறாங்க பாருங்க!

ஃபேஸ்புக் போட்டோவில் அழகாகத் தோன்ற என்னவெல்லாம் செய்கிறாங்க பாருங்க! 


ஃபேஸ்புக்கில் போடும் புகைப்படத்தில் அழகாகத் தோன்றுவதற்காக பலர் அறுவை சிகிச்சை, லேசர் சிகிச்சை என்று பல்வேறு சிகிச்சைகள் மேற்கொள்கின்றனர். ஃபேஸ்புக் மோகம் இளம் வயதினரை மட்டுமல்ல நடுத்தர மற்றும் வயதானவர்களையும் விடவில்லை.

ஃபேஸ்புக்கில் தங்கள் பக்கத்தில் ப்ரொபைல் போட்டோ போடுகின்றனர். இந்த ஃப்ரொபைல் போட்டோவில் அழகாகத் தோன்ற மக்கள் என்ன கூத்தெல்லாம் செய்கிறார்கள் என்று தெரியுமா? ப்ரொபைல் போட்டோவில் பளிச்சென்று தெரிய பலர் அறுவை சிகிச்சை வரை செல்கிறார்களாம்.

அழகு சிகிச்சை 

இந்தியாவில் 20 மற்றும் 30களில் இருக்கும் நபர்கள் ஃபேஸ்புக் போட்டோவில் அழகாகத் தோன்ற லேசர் சிகிச்சை, நாடியை அழகாக்கும் சிகிச்சை, பிளாஸ்டிக் சர்ஜரி என்று பல்வேறு சிகிச்சைகளை மேற்கொள்கின்றனர்.

இந்த பைத்தியம் அதிகரிக்கும் 

ஃபேஸ்புக்கிற்காக அழகு சிகிச்சை செய்துகொள்வோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது என்று பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் மருத்துவர் அனிப் திர் தெரிவித்துள்ளார். ஆண்கள் ரூ.1.20 லட்சம் செலவு செய்து நாடியை அழகாக்கும் சிகிச்சையை அதிகளவில் பெறுகிறார்களாம்.

பெண் தேடும் படலம் 

ஃபேஸ்புக்கில் திருமணத்திற்கு பெண் தேடும் ஜஸ்மீத் சிங் என்பவர் ஒல்லியாகத் தெரிய வேண்டும் என்பதற்காக லிப்போசக்ஷன் செய்யப் போகிறாராம். ஒல்லியாக இருந்தால் தான் பெண் கிடைக்கும் என்று அவரது நண்பர்கள் தெரிவித்தார்களாம்.

ஒரு போட்டோவுக்கு இத்தனை அழும்பா? 

ஃபேஸ்புக்கில் ஒரு போட்டோ போட இவ்வளவு பணம் செலவு செய்து அழகு சிகிச்சை பெறத் தான் வேண்டுமா?


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!