ஒரு கிலோவுக்கு ஒரு கிராம் தங்கம்: துபாய் அரசின் புது ‘எடைக்குறைப்புத்’ திட்டம்
உடல் எடையில் ஒரு கிலோவைக் குறைத்தால், ஒரு கிராம் தங்கம் பரிசளிக்க இருப்பதாக கவர்ச்சிகரமான திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது துபாய் அரசு. இன்று மனிதனுக்கு பெரும் எதிரியாக இருப்பது உடல் பருமன் தான்.
அதன் காரணமாகவே பலருக்கு இளமையிலேயே பல நோய்கள் உண்டாகி மரணம் கூட நேரிடுகிறது. துபாயில் வாழ்பவர்களின் ஆரோக்கியத்தை பேணும் வகையில் துபாய் அரசு உடல் எடையைக் குறைத்தால் தங்கம் என அறிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளது.
புதிய சுகாதார திட்டம்...
துபாயில் அறிமுகப் படுத்தப் பட்டுள்ள புதிய சுகாதாரத் திட்டம் தான், இந்த ஒரு கிலோ எடையைக் குறைத்தால் ஒரு கிராம் தங்கக் காசு திட்டம். இது, உடல் பருமன் நோயால் மக்களுக்கு ஏற்படும் பக்க விளைவுகளை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்ட திட்டமாம்.
முன்பதிவு அவசியம்...
இந்தத் திட்டத்தில் வெற்றி பெற விரும்புபவர்கள் முதலில் தற்போதைய தங்களது எடையை வரும் வெள்ளிக்குள் பரிசோதித்து பதிவு செய்து கொள்ள வேண்டுமாம்.
ஒரு மாதகால அவகாசம்...
அடுத்து வரும், ஒருமாத காலத்திற்குள் குறைந்தப்பட்சமாக 2 கிலோ அல்லது அதற்கு மேற்பட்ட உடல் எடையை குறைத்துக் காட்டுபவர்களுக்கு கிலோவுக்கு ஒரு கிராம் வீதம் தங்கம் பரிசாக வழங்கப்படும் எனவும், இதில் பங்கு பெற உச்சவரம்பு ஏதுமில்லை எனவும் அரசு அறிவித்துள்ளது.
உடற்பயிற்சியில் ஆர்வம்...
இதன் மூலம், மக்கள் துரித உணவகங்களில் அதிகம் சாப்பிடுவதை கைவிட்டு, உடற் பயிற்சியின் மீது ஆர்வம் காட்டுவர் என துபாய் அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!