இத்தாலி விண்வெளி வீரரின் ஹெல்மெட்டில் நீர்க்கசிவு...: பாதியில் நின்ற நடைப்பயணம்
நாசா விண்வெளி மையத்திலிருந்து சமீபத்தில், ஆறு விண்வெளிவீரர்களை விண்ணிற்கு அனுப்பியது. விண்வெளியில் நடத்தப்பட வேண்டிய வழக்கமான பராமரிப்பு பணியுடன், கேபிள் இணைப்பு போன்ற பணியையும் செய்வதற்காக அவர்கள் ஆறு மணி நேரம் விண்வெளியில் இருப்பதாக திட்டமிடப் பட்டிருந்தது. ஆனால், வேலையை ஆரம்பித்த ஒருமணி நேரத்திற்குள்ளாக இத்தாலி வீரரின் ஹெல்மெட்டில் நீர்க்கசிவு ஆரம்பித்ததால் அவரது நடைப்பயணம் உடனடியாக நிறுத்தப்பட்டது.
முதல் இத்தாலி வீரர்...
நாசா அனுப்பிய ஆறு விண்வெளி வீரர்களில் லுகா பர்மிடானோ என்ற இத்தாலி வீரரும் ஒருவர். இவர் தான விண்ணில் நடக்க இருக்கும் முதல் இத்தாலியர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர். இவர் நேற்று, கிறிஸ்டோபர் காசிடி என்ற மற்றொரு வீரருடன் இணைந்து லுகா விண்வெளியில் நடக்க ஆரம்பித்தார்.
வியர்வையா இது...
நடக்க ஆரம்பித்த ஒரு மணி நேரத்திற்கெல்லாம் பர்மிடானோ தனது பின்னந்தலையில் நிறைய தண்ணீர் இருப்பதுபோல் உணர்ந்துள்ளார். முதலில் அதனை வியர்வை என நினைத்த லுகா, பின்னர் நீரின் அளவு அதிகரித்ததால் சந்தேகமடைந்துள்ளார்.
தண்ணீர் பாக்கெட் லீக்...
தனது சந்தேகத்தினை அவர் தனது சக வீரரிடம் கூறியபோது, தண்ணீர் அருந்துவதற்காக உள்ள தண்ணீர்ப் பையில் நீர்க்கசிவு ஏற்பட்டிருக்கலாம் என அவர் சமாதானாம் கூறியுள்ளார்.
கண்ணீல் நீர்...
நேரமாகமாக, தண்ணீர் அவரது கண்ணில் நிறைய ஆரம்பித்துள்ளது. பின்னர் படிப்படியாக நீர் காது, மூக்கு என நிறைய ஆரம்பித்ததனால், நாசாவின் அறிவிப்புகளைக் கூட அவரால் கேட்க இயலாத நிலை உண்டானது.
உலர வைக்கப்பட்டது...
உடனடியாக விண்வெளி மையத்திற்கு திரும்பிய லுகாவின் ஹெல்மெட் கழட்டப்பட்டது. நண்பர்கள் உதவியுடன் ஈரமான லுகாவின் தலை துவட்டி உலர வைக்கப் பட்டது. பின்னர் உற்சாகத்துடன் லுகா கையசைக்கும் காட்சியை நாசா தொலைக்காட்சியில் பார்த்த பின்னரே அனைவருக்கும் நிம்மதி பெரு மூச்சு வந்தது.
ஏற்கனவே, ஒருமுறை...
ஏற்கனவே, இதேபோன்று 2004ம் ஆண்டு ஏற்பட்ட நீர்க்கசிவால் 14 நிமிடங்களிலேயே அவர்கள் தங்கள் நடைப்பயணத்தை முடித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
நடந்தது என்ன?
லுகாவின் ஹெல்மெட்டில் நீர்க்கசிவு ஏற்படக் காரணம் என விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். நேற்று இவர்களின் விண்வெளி நடை ஒரு மணி 32 நிமிடம் நீடித்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!