Tuesday, July 16, 2013

நெப்ட்யூனின் 14வது நிலாவைக் கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்

நெப்ட்யூனின் 14வது நிலாவைக் கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்




நெப்ட்யூன் கிரகத்தின் இன்னொரு புதிய நிலவை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஹப்பளி தொலைநோக்கி மூலம் இந்த புதிய நிலா குறித்த இருப்பு தெரிய வந்துள்ளது. நெப்ட்யூனைச் சுற்றி இது வலம் வந்து கொண்டுள்ளதாம். இது நெப்ட்யூனின் 14வது நிலாவாகும்.

நீல பச்சை கிரகம் 

நெப்ட்யூன் நீலம் மற்றும் பச்சை நிறத்திலான கிரகம் ஆகும். இந்த கிரகத்திற்கு இதுவரை 13 நிலாக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


ஹப்பிள் கண்டுபிடித்த 14வது நிலா 

இந்த நிலையில் நெப்ட்யூன் கிரகத்தின் இன்னொரு நிலவைக் கண்டுபிடித்துள்ளனர் ஹப்பிள் துணையுடன். இது அக்கிரகத்தின் 14வது நிலாவாகும்.


நிலாவுக்குப் பெயர் வச்சாச்சு 

இந்த நிலாவுக்கு S/2004 N 1 என்று பெயரிட்டுள்ளனர். இந்த நிலவின் சுற்றளவு 19 கிலோமீட்டர் என்று கணக்கிடப்பட்டுள்ளது. நெப்ட்யூனின் நிலவுகளிலேயே இதுதான் சிறியதாம்.



மங்கலாத் தெரியுதே... 

இந்த நிலவானது சிறிதாகமட்டுமல்லாமல், மங்கலாகவும், பிரகாசம் இன்றியும் காணப்படுகிறது. ஒரு நட்சத்திரத்தை விட 100 மடங்கு டிம்மாகவும் இது காணப்படுகிறது.


ஜூலை 1ம் தேதி கண்டுபிடித்தார்கள் 

கடந்த ஜூலை 1ம் தேதி இந்த நிலாவைக் கண்டுபிடித்துள்ளனர் நாசா விஞ்ஞானிகள்.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/07/16/world-new-neptune-moon-discovered-179241.html#slide244530

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!