உலக வர்த்தக அமைப்பின் தலைமையகம் ஜெனிவாவில் திறப்பு
பிரமாண்ட முறையில் விரிவாக்கப்பட்ட உலக வர்த்தக அமைப்பின் தலைமையகம் ஜெனிவாவில் திறக்கப்பட்டுள்ளது.
உலக வணிக அமைப்பின் இயக்குனர் பாஸ்கல் லாமி(Bascal lamy), சுவிசின் பொருளாதார கூட்டாட்சி அமைச்சர் சார்லஸ்(Charles) மற்றும் ஜெனிவா மண்டல அரச தலைவர் ஆகியோர் இக்கட்டிடத்தினை திறந்து வைத்தனர்.
இக்கட்டிடமானது 130 மில்லியன் பிராங்க் செலவின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது, இதன் தலைமையகத்தின் தளமானது 20,000 சதுர மீட்டர் பரப்பில் அமைந்துள்ளது.
மேலும் நவீனமயமான இக்கட்டிடம் கட்டுவதற்காக சுவிஸ் அரசாங்கத்திடமிருந்து 70 மில்லியன் பிராங்க் வட்டியில்லாமலும் 60 மில்லியன் பிராங்க் வட்டியோடும் வாங்கப்பட்டுள்ளது.
இக்கட்டிடத்தை கட்டுவதற்கு பல வகையான பிரச்சனைகளை சந்திக்கவேண்டியிருந்தது. ஏனெனில் இந்த இடமானது பொது பூங்கா இருந்த இடம் என்பதால் இத்திட்டத்தை நிறுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட பல பிரச்சாரங்கள் மற்றும் தடைகளை மீறி கட்டப்பட்டுள்ளது.
இந்நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி 70 நாடுகளைச் சார்ந்த நபர்களும், ஜெனிவாவில் 629 ஊழியர்களும் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!