மனசாட்சி இல்லாத சீனா: விழி பிதுங்கும் கார் வெளிநாட்டு கார் நிறுவனங்கள்
மேலைநாட்டு கார் மாடல்களை காப்பியடித்து புதிய மாடல்களை அறிமுகம் செய்வது சீன கார் தயாரிப்பாளர்களுக்கு கைவந்த கலை. பிஎம்டபிள்யூ, ஆடி, பென்ஸ் என முன்னணி நிறுவனங்களின் கார்களை போன்ற 'டூப்ளிகேட்' கார்கள் சீன சாலைகளில் சர்வசாதாரணமாக வலம் வருகின்றன.
காரணம், சீனாவின் காப்புரிமை விதிமுறைகள் அப்படி. வழக்கு தொடர்ந்தாலும் பிரயோஜனமில்லை என்பதால் மேலை நாட்டுநிறுவனங்களும் இந்த விஷயத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதை குறைத்துக்கொண்டுவிட்டன. இது ஒரு பக்கம் இருக்க, மறுபுறம் பிஎம்டபிள்யூ கார் போன்றே மாற்றிக் கொள்வதற்கான போலி உதிரிபாகங்களின் புழக்கமும் ஜாஸ்தியாக உள்ளன.
காஸ்மெட்டிக் ஐட்டங்கள் கொண்ட கிட் ஒன்றை வாங்கி மெக்கானிக்கிடம் கொடுத்து பொருத்திக் கொண்டால் போதும். அச்சு அசல் மேலைநாட்டு சொகுசு கார்கள் போன்றே மாறிவிடுகிறது சீன தயாரிப்பு கார்கள். இதுதான் தற்போது பெரும் பிரச்னையாகி இருக்கிறது சொகுசு கார் நிறுவனங்களுக்கு. மலிவு விலையில் கிடைப்பதால் விற்பனையும் அமோகம்.
இந்த போலி தயாரிப்புகள் எந்த ஒளிவு மறைவுமின்றி விற்பனைக்கு கிடைக்கின்றன. இதனை தடுக்கும் அளவுக்கு அங்கு கெடுபிடியான சட்டங்கள் இல்லை. இதுவே, பிஎம்டபிள்யூ உள்ளிட்ட கார் நிறுவனங்களுக்கு அங்கு பெரும் சவாலான விஷயங்களாக மாறியிருக்கிறது. ஸ்லைடரில் போலி கிட் பொருத்தப்பட்ட கார்கள் மற்றும் போலி உதிரிபாகங்களையும் காணலாம்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!