Tuesday, March 19, 2013

சூரியன் சூடு ஓவரா இருக்கே! நோய் தாக்காமல் எப்படி தப்பிக்கலாம்?


சூரியன் சூடு ஓவரா இருக்கே! நோய் தாக்காமல் எப்படி தப்பிக்கலாம்?

வசந்தகாலம் தான் தொடங்கியுள்ளது. ஆனால் கோடை காலத்தைப்போல சுட்டெரிக்கிறது வெப்பம். உதிக்கும் போது என்னவோ செவ்வானம் அழகாய் தான் இருக்கிறது. ஆனால் நேரம் செல்லச் செல்ல வெயிலின் தாக்கம் தகிக்கிறது.

இன்னும் அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கவில்லை அதற்கு முன்பே வெயில் சுட்டெரிக்க ஆரம்பித்துள்ளது. சென்னையில் நேற்று 32.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருந்தது. கடல் காற்று திசை மாறி உள்ளதால் தமிழ் நாட்டில் வறண்ட வானிலை காணப்படுவதாகவும் இனி நாளுக்கு நாள் வெயிலின் அளவு அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல்-மே மாதங்களில் 35 டிகிரிக்கும் மேல் 37 டிகிரி வரை வெயில் இருக்கும் என்றும் சில ஊர்களில் 40 டிகிரி வரை வெப்பம் நிலவும் என்றும் வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியுள்ளனர். பருவநிலை மாற்றம் வேறு மழையை குறைத்துவிட்டது. இதனால் ஏரி, குளங்களும் வறண்டுவிட்டன. குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுமே என்ற அச்சமும் எட்டிப்பார்க்கத் தொடங்கிவிட்டது.

மின்சாரத் தட்டுப்பாடு வேறு இரவுகளில் தூக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு வியர்வையை அதிகரிக்கிறது. கொசுவிற்கு வரவேற்பு அளிக்கிறது.




கண் நோய் வரலாம் 

கொளுத்தும் வெயியினால் கோடை காலத்தில் தோன்றும் கண் நோய்களும் வயிற்றுக் கோளாறுகளும் இப்போதே எட்டிப் பார்க்கத் தொடங்கிவிட்டன. மெட்ராஸ் ஐ எனப்படும் கண் சிவப்பு நோய் ஆங்காங்கே தோன்றி வருவதால் கண்ணை பத்திரமாக பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்


வேர்க்குரு அரிப்பு வரலாம் 

கோடை காலத்தில் வியர்வை அதிகமாகி உடம்பில் வேர்க்குரு அதிகமாகலாம் இதனால் அரிப்பும் ஏற்படும். சிலருக்கு தோலில் அலர்ஜி ஏற்படவும் வாய்ப்புண்டு. எனவே தினமும் இருவேளை குளிக்கவேண்டும் என்று அறிவுறுத்துகின்றனர் மருத்துவர்கள்.


அச்சுறுத்தும் அம்மை நோய் 

வெயிலின் தாக்கத்தோடு அவ்வப்போது சில நேரங்களில் தூரலும் போடுகிறது. இந்த கலவையான சீசனால் தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் சின்னம்மை, பெரியம்மை நோய்கள் எட்டிப் பார்க்கின்றன. எனவே குழந்தைகள் பள்ளி முடித்து வந்த உடன் ஒருமுறை கை, கால்களை கழுவி சுத்தப்படுத்துவது அவசியம்.


டைபாய்டு, நிமோனியா வரலாம் 

வெயில் உக்கிரம் அதிகரிக்கும் போது டைபாய்டு, நிமோனியா, வைரஸ் காய்ச்சல், மஞ்சள் காமாலை நோய்களும் ஏற்படும் அபாயம் உள்ளது எனவே வருமுன் காப்பது அவசியம்.


டெங்கு ஜாக்கிரதை 

கோடை காலத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்கும் எனவே கொசுக்களிடம் இருந்தும் பாதுகாத்துக் கொள்வது அவசியம். பன்றிக்காய்ச்சல் பாதிப்பில் இருந்தும் தப்பித்துக் கொள்ளவேண்டும்.


நுங்கு பதநீர் குடிங்க 

கோடை காலத்தில் இயற்கை அளித்திருக்கும் பானம் நுங்கு, பதநீர். இளம் நுங்கை சீவி எடுத்து பொடியாக்கி, அதில் பாதநீர் ஊற்றி பனை ஓலையில் குடிக்கலாம் உடல் சூடு அடங்கும்.


கூல்டிரிங்ஸ் வேண்டாமே 

தாகம் தணிக்கிறோம் என்று பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்களை வாங்கிக்தரவேண்டாம். அதேபோல் தெரு ஓரங்களில் தூசி படிந்த நிலையில் உள்ள குளிர்பானங்களை சாப்பிட வாங்கித தரவேண்டாம். சத்தான குளிர்ச்சியான,தாகம் தணிக்கும் பழங்களையும், பழச்சாறுகளையும் சாப்பிட வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாகும்.


இளநீர், தர்ப்பூசணி சாப்பிடலாம் 

உடலை குளிர்விக்கும் வகையில் தண்ணீர், இளநீர், தர்பூசணி மற்றும் தாகம் தணிக்கும் மோர் போன்ற பானங்களை அருந்தினால் இவற்றை தடுக்க முடியும் என்றார்.









No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!