Monday, March 18, 2013

துபாயில் ரூ. 3,300 கோடி செலவில் சூரிய மின்சக்தி திட்டம் ஆரம்பம்

துபாயில் ரூ. 3,300 கோடி செலவில் சூரிய மின்சக்தி திட்டம் ஆரம்பம்



உலகின் மிகப் பெரிய சூரிய மின்சக்தி திட்டம் துபாயில் 3,300 கோடி ரூபாய் செலவில் தொடங்கப்பட்டது.
இதன் மூலம் 20 ஆயிரம் வீடுகள் மின்வசதி பெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றான துபாய் குடியரசில் மதினா சயீது பகுதியில் உலகின் மிகப் பெரிய சூரிய மின்சக்தி திட்டம் 3,300 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

நேற்று நடந்த தொடக்க விழாவில் ஐக்கிய அரபு குடியரசின் ஜனாதிபதியும் அபுதாபி குடியரசின் மன்னருமான ஷேக் கலீபா பின் சயீத் அல் நகியான் கலந்துகொண்டு "ஷாம்ஸ்-1" என பெயரிடப்பட்ட இத்திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தற்போது உலகில் சூரிய சக்தியை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மின் சக்தியில் இங்கு மட்டும் 10 சதவீதம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

வளைகுடா ஒத்துழைப்பு நாடுகளில் தயாரிக்கப்படும் மொத்த மின் உற்பத்தியில் 68 சதவீதம், இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் 20 ஆயிரம் வீடுகள் மின்வசதி பெறும் என தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!