மணிடோபாவின் கடுமையான பனிப்பொழிவு: வெள்ளத் தடுப்புக்கு தயாராகும் அரசு
கனடாவிலுள்ள மணிடோபாவில் அமைந்துள்ள பிரேரீஸ்(Prairies) மலை பகுதிகளில் தற்பொழுது கடுமையாக பனிப்பொழிவு காணப்படுவதினால் இன்னும் சில தினங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது உறுதியாகி விட்டது.
எனவே இதற்கு தேவையான வெள்ள அபாயத் தடுப்பு நடவடிக்கைகளுக்கு கனடா அரசு தயாராகி வருகின்றது.
இது குறித்து கனடா அவசர நடவடிக்கைகள் துறையின் அமைச்சரான ஸ்டீவ் ஆஷ்டன்(Steve Ashton) கூறுகையில், கடந்த 2011ம் ஆண்டு இதே நேரத்தில் ஏற்பட்ட பயங்கரமான வெள்ள பெருக்கால் பெரும் துயரத்தை சந்தித்தோம்.
ஆனால் இனி வரும் காலங்களில் அந்த அளவிற்கு வெள்ள பெருக்கு ஏற்படாது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இனி வரவிருக்கும் வெள்ள பெருக்கிற்கான செலவிற்கு 1.2 பில்லியன் டொலர் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!