பாலஸ் வேண்டாம், கெஸ்ட் ஹவுஸே போதும் - போப் ஆண்டவர் பிரான்சிஸ்
வாடிகன் நகரில் வீடு தயாராகியும் தொடர்ந்து கெஸ்ட் ஹவுஸிலேயே தங்கி வருகிறார் போப் ஆண்டவர். போப் ஆண்டவர் 16-ம் பெனடிக்ட் பதவி விலகியதை தொடர்ந்து புதிய போப் ஆண்டவராக பிரான்சிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அர்ஜென்டினாவை சேர்ந்த இவர் போப் ஆண்டவர் தேர்வுக்காக வாடிகன் நகருக்கு வந்திருந்தார். மேலும் கடந்த 13-ம் தேதி முதல் அங்குள்ள ஒரு ஹோட்டலில்தான் தங்கியிருந்தார்.
அதன் பின்னர் அவர் கெஸ்ட் ஹவுஸுக்கு இடம் பெயர்ந்தார். தற்போது அவருக்கு வாடிகன் நகரில் போப் ஆண்டவருக்கான வீடு புதுப்பிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இருந்தும் அவர் உடனடியாக போப் ஆண்டவர் இல்லத்திற்கு செல்ல தயாராக இல்லை. தொடர்ந்து தான் தங்கியிருக்கும் கெஸ்ட் ஹவுஸிலேயே இருக்க விரும்புகிறார்.
தினசரி தான் நடத்தும் பிரார்த்தனைக்கு வாடிகன் தோட்ட ஊழியர்கள், துப்புரவு தொழிலாளர்கள் மற்றும் கெஸ்ட் ஹவுஸ் ஊழியர்களுக்கு அழைப்பு கொடுத்து பங்கேற்க செய்கிறார். போப் ஆண்டவர் கெஸ்ட் ஹவுஸில் தங்கியிருப்பது குறித்து அவரது செய்தி தொடர்பாளர் பிடாரிக்கோ லாம்பார்டி கூறும்பொழுது, 'போப் ஆண்டவர் எவ்வளவு நாள் கெஸ்ட் ஹவுஸில் தங்கியிருப்பார் என தெரியவில்லை. ஆனால் அவர் கூடிய விரைவில் போப் ஆண்டவர் இல்லத்திற்கு வருவார்' என்றார்
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!